(வி - ம்.) வீங்கு - பருத்த. "நாகுவேயொடு நக்குவீங்குதோள்" என்பதனா னறிக. வியங்கோளுறீஇ - ஏவலைப்பெற்று. அமர - ஒப்ப. தாங்கும் - காக்கும். அமரவோங்கு மெனவும் முத்தெழவூழ்க்கு மெனவும் முடிவுசெய்க. வேய் - எழுவாய். (16) | மென்மை யாரிடம் வாய்த்துமி குத்துறின் | | வன்மை யார்வலி மாய்ப்பது காட்டுமென் | | றன்மை யாரரு வித்திரள் சான்றகல் | | புன்மை யாகப்பொ ளிந்தொரு பாலெலாம். |
(இ - ள்.) மெல்லிய தன்மைவாய்ந்த அருவியின் கூட்டம் வலியா னுயர்ந்த கற்கள் நொய்மையாம்படி பொள்ளல் செய்து (தம்பகை வரைக் காட்டிலும் பொருள் கருவி முதலியவற்றான்) மெலியார் பொருள் கருவி காலமிட முதலியன வாய்க்கப்பெற்று வலிமிகுமாயின் தம்மினும் வல்லமை யுடையாருடைய வன்மையுங் கெடுத்தலைக் காட்டும். (வி - ம்.) பொளிந்து காட்டுமென வினைமுடிவு செய்க. சான்ற -(வலியான்) உயர்ந்த. பொளிந்து - பொள்ளல் செய்து துளைத்து. (17) | கெழுமு பாவங்கிட் டாதுபெ யர்ப்பபோல் | | விழும வெள்ளரு வித்திரள் வீழ்வன | | இழுமெ னோதையு மந்தரத் தின்னியம் | | குழுமு மோதையுங் கூர்க்குமொர் பாலெலாம். |
(இ - ள்.) தன்னுள் மூழ்கிய வான்மாக்களி னிடத்தும் பொருந்திய பாவ மீண்டும் வந்தணுகாமல் நீக்குவன போலப் பெருமை பொருந்திய வெள்ளிய அருவியின் கூட்டங்கள் வீழ்தலினாலுண்டாகிய இழுமென்னும் ஓதையும் தேவலோகத்தின்கட் குழுமிய ஓசையும் ஒரு பகுதியினிடங்களிலெல்லாம் மிகும். (வி - ம்.) விழுமம் - பெருமை. வீழ்வனவற்றா லுண்டாகிய ஓசையென்க. கூர்க்கும் - மிகும். (18) | அரம்பு செய்பிணி தீர்வெறி யாட்டயர் | | வரம்பிற் றொண்டக வங்கிய வோதையும் | | நரம்பி னேழிசை நாவியற் பாடலும் | | சுரம்பொற் கென்னத்து தையுமொர் பாலெலாம். |
(இ - ள்.) குறும்பைச் செய்கின்ற காமநோயை நீக்குகின்ற வெறியாட்டைச் செய்கின்ற விடத்திலுண்டாகிய அளவிட வியலாத குறிஞ்சிப் பறையி னோதையும், ஊதுகொம்பினோதையும், நரம்புக் கருவியி்ன் கண்ணுண்டாகிய சரிகம பதநி யென்னு மேழிசையும், நாவினிடத்துப் பொருந்து மியல்பமைந்த பாடலும் பாலைநிலமுந் தழைத்துப் பொலிவு பெற நெருங்குமொரு பகுதியினிட மெல்லாம். (வி - ம்.) அரம்பு - குறும்பு இதனை "மெலியவர் பெற்ற செல்வம் வேரொடும் கீழ்ந்து வௌவி, வலியவர் கொண்டு மேலை வரம்பிகந் |