யிருக்க (அவ்வுயிர்கண் மாட்டுக்கொண்ட கைம்மாறில்லாத) கருணையின் றன்மையால் எண்ணினா லளவிட முடியாத உயிர்களைக் கருவிகரணங்களோடு (சகலாவத்தையிற்) சேர்க்கின்றாய். அங்ஙனம் தனுகரணங்களைப் பொருந்திச் சகலத்தில் வந்த உயிர்களுள் வைத்துச் (சத்தினிபாதமுற்ற) சிலவுயிர்களைக் கருணைக்கையாலெடுத்து மயக்கமில்லாத சுத்தாவத்தையின்கட் கொடுவந்து சேர்க்கின்றாய். நின்னை நின்மல துரியா தீதத்தின்கண் ஏக னாகி நின்ற சீவன் முத்தரையன்றி வேறியாவரறிய வல்லுநர். (வி - ம்.) கேவலாவத்தையின்கண் ணுயிர்கள் கட்டுண்டிருக்கு ஞான்று இறைவனை வழிபடற்குரிய கருவிகரணங்களின்றாயிருக்க அந் நிலையிற் றனது கைம்மாறில்லாத பெருங்கருணைத் திறத்தினால் காரணமின்றி அவ்வான்மாக்களுக்குத் தனுகரணங்களைத்தந்து சகலாவத்தையிற் கொணர்ந்தானென்பார். "இயல்விச்ச தேதுமிலதாக் - கருணைத்திறத்தி னலகற்ற வாவி கருவிப்படுத்தி" யென்றார். அவ்வாறிறைவனீந்த தனு கரணங்களைப்பெற்றுத் தன்னையுந் தலைவனையுமறிந்து சத்தினிபாதமுற்ற வுயிர்களைச் சுத்தாவத்தையிற் கொணர்ந்தானென்பார் "கருவி மருவுற்ற வற்று ளுயிர்சில்லவாங்கி மயரற்ற சுத்தநிலையிற் றருகிற்றி" என்றார். வித்து : விகாரம் விச்சு. விச்சு - ஞானம். அது காரணமென்பதுபட நின்றது. இருள் - கேவலாவத்தை. அத்து - சாரியை. கருவி - தனுகரணங்கள். சுத்தநிலை - சுத்தாவத்தை. (88) | திளைமாயை மோக வினையிற்பி ணைந்த செறியாவி யின்ப நிலையில் | | வளையாவி டுப்ப வுருமூன்றெ டுத்தி வழியூடு கைத்து நலனை | | வினையாவ ளித்தி வினையொப்பு றுத்தி வினைமாயை மூல மலநோய்த் | | தளைவீழ்த்தி நின்னை யருளாகி நின்ற தவரன்றி யாவ ரறிவார். |
(இ - ள்.) அநுபவிக்கின்ற மாயாமலத்தினும், மயக்கத்தைச் செய்கின்ற கன்மமலத்தினும் பின்னிக்கிடக்கின்ற (உடம்பிற்) செறிந்த உயிர்களைப் போக நிலையின்கண் வளைத்து விடுக்க அயனரியரனென்னு மூன்று திருவுருவங்களை யெடுக்கின்றாய். (அவ்வுயிர்களை) நன்னெறிக்கட் செலுத்தி இன்பத்தினை விளைத்து அளிக்கின்றாய். இருவினைச் சமஞ் செய்து, கன்மமலமும் மாயாமலமும் ஆணவமலமுமென்ற பிணியாகிய பந்தத்தினை நீக்குகின்றாய். நின்னை நின்மலதுரியாதீதத்தின்கண் ஏக னாகி யிறைபணி நின்ற சீவன் முத்தர்களையல்லாமல் வேறியாவரறிய வல்லுநர். (வி - ம்.) வழி - நன்னெறி. வினையொப்பு - இருவினைச்சமம். வினை - கன்மமலம். மூலமலம் - ஆணவமலம். (89) | உயங்கப்பி ணிக்கும் வினையுங்க ரந்து ளுடனாய்மு டித்தி யதனை | | வயங்கத்தெ ரித்தி மறுகத்த கர்த்தி வளராமை நூலின் முறையின் | | இயங்கப்பு குத்தி யெரிகும்பி யூடு மினைவித்தி தோய்த லிலையாய்த் | | தயங்குற்றி நின்னை யருளாகி நின்ற தவரன்றி யாவ ரறிவார். |
(இ - ள்.) (ஆன்மாக்கள்) வருந்தப் பந்தித்தற்கேதுவாகிய தொழிலினை அவ்வான்மாக்களி னகத்தே மறைந்துடனாய் நின்று முடிக்கின்றாய். |