பக்கம் எண் :

பிரமன் சிருட்டி பெறு படலம்313

(இ - ள்.) நின்னுடைய திருவடிகளிற் சிறந்த அன்பைச் செல்வக் காலையிலும் அல்லற் காலையிலுஞ் செய்கின்ற வாழ்க்கையும், நின்னை அடியார்களிடத்தில் மறந்தேனும் நீங்கிய மதிப்புளவாகாமையும், தணிகைமலையின்கட்டங்கி வாழ்கின்றவர் பெருஞ்செல்வத்தினை யுடையராகி நினைக்கின்ற பேற்றை யடையவும் அவ்விடத்து அறத்தினையே திருமேனியாகக்கொண்டு தழைத்திருக்கின்ற சிவக்குறியினை இறைஞ்சுகின்ற அன்பினையுடையார் என்னுடைய சத்தியலோகத்தை யடையவும் வேண்டும்.

(வி - ம்.) இகந்த மதிப்பு - மதியாமை. இதனை "விட்டவுண்டியர்ழு போலக் கொள்க. தணிகையை மூலாத்திரி எனக் கூறலான் "விருத்தகிரி" யென்றார். உறந்த - தங்கிய. வெறுக்கை - செல்வம். உலகு - சத்தியலோகம்.

(98)

 இத்த லைப்படுதி ருத்தமெ னாமம்
           எய்த வுந்தலைவ வின்றுவை காசி
 ஒத்த பூரணைவி சாகம டுத்த
           வொண்மை யாலிவைய டுத்துறு காலைப்
 பைத்த விப்புனல்ப டிந்தவர் மும்மைப்
           பாத கங்கள்பல வுந்தப நுறி
 மெத்து செல்வமலி யென்னுல கெய்தி
           வீற வுங்கருணை நல்குதல் வேண்டும்

(இ - ள்.) இவ்விடத்துப் பொருந்திய தீர்த்தம் அடியேன் பெயரினைப் பொருந்தவும், இந்நாள் வைகாசித் திங்களோடு பொருந்திய பூரணையில் விசாகநாள் பொருந்திய மேன்மையால் இவை யொன்று சேர்ந்த காலத்துப் பரவிய இத் தீர்த்தத்தில் ஆடினோர்கள் மூவகையான் வருகின்ற பாதகங்க ளெல்லாவற்றையும், மிகக்கெடுத்து நிறைந்த செல்வம் பொருந்திய அடியேன் வாழ்கின்ற சத்திய லோகத்தை யடைந்து வேறொருவர்க்கில்லாத பெருமையடையவுங் கருணை செய்தல்
வேண்டும்.

(வி - ம்.) பாதகம் மூன்று - பாதகம், உபபாதகம், அதிபாதகமாம். பாதகமாவது விலக்கியன செய்தல். உபபாதகம் - பாதகஞ் செய்வோனுக்குத் துணையா யிருந்ததனால் வருவது. அதிபாதகம் - தாய்க் கொலை முதலிய மாபாதகம். இதனை அகத்தியப் படலத்திற் காண்க. பைத்த - பரவிய. மெத்திய - நிறைந்த.

(99)

 அளிய னிங்குநவி றோத்திர மோதும்
           அன்பு ளார்கவிதை நான்குந டாத்தும்
 களிமி குங்கவிக ளாகிவ ளங்கள்
           கஞலி யெப்பிணியு முப்புடை கண்டாங்
 கொளிசெய் நின்னுலக மெய்தலும் வேண்டும்
           மொருவ வென்னவர முற்றும ளித்து