பக்கம் எண் :

நந்தி யுபதேசப் படலம்379

திருவடிகளிலே பதிந்த சிந்தையினை மீட்டுக்கொள்ளமாட்டாதவராய் மெல்ல மெல்லப் பிந்திப் பிந்தி ஆகாயவழியிற் செல்கின்றார்.

(144)

 கோயிலை வணங்கி யப்பாற் குன்றினை வணங்கித் தான்றோய்
 பாயிருந் தீர்த்த மான படர்நதி வணங்கி யவ்வூர்
 மேயின வெல்லை தாழ்ந்து வெற்பது மறையுங் காறும்
 சேயொளி விழிநே ராகச் சென்றுபின் றிரும்பிச் சென்றான்.

(இ - ள்.) திருக்கோயிலினை வணங்கி அதன்மேற் றிருத்தணிகா சலத்தை வணங்கித் தாம் மூழ்கிச் சுத்தமடைந்த பரவிய பெரிய தீர்த்தமாகிய நந்தி நந்தினியென்னும் நதியினை வணங்கி அத்தலத்தின் திருவெல்லையை வணங்கி, திருத்தணிகைமலை கண்ணறிவுக் கெட்டாது மறையும் வரையும் செந்நிறத்தோடு கூடிய விழியினுக்கு நேராகும் வண்ணஞ் சென்று அதன் பின்னர்த் திருக்கைலாயத்தை நோக்கி நேராகச் சென்றார்.

(145)

 விலங்கலுந் தலமு மாண்ட வித்தக னுருவு மெல்லாம்
 நலங்கிள ரறிவிற் றோய்த்து நயத்தகப் பொறித்து வைத்த
 அலங்குபொற் கிழியே யான வகத்தினான் கயிலை சார்ந்தங்
 கிலங்கருட் குரவற் போற்றி யேவலி னிருக்கின் றானால்.

(இ - ள்.) தணிகைமலையும் அத்தலமும், நம்மை யடிமைகொண்ட பரமாசாரியனாகிய குமரக்கடவுளின் றிருவுருவமாகிய எல்லாவற்றையும் நன்மைமிக்க தமது அறிவாகிய மையினிடத்துத் தோய்த்து ஆன்மலாபமுறும்படி சிந்திக்கும் சிந்தையாகிய கோலினாலே எழுதிவைத்த விளங்குகின்ற பொற்படமேயாகிய திருவுளத்தினையுடைய திருநந்தி தேவர் திருக்கைலைமலையை யடைந்து அவ்விடத்தே அரும்பிரகாசத் தோடும் எழுந்தருளியிருக்கின்ற பரமாசாரியனாகிய சிவபெருமானை வழிபட்டு அருளிறைபணி வழுவாது இயற்றுதல் செய்து ஆண்டே வதிதலாயினர்.

(146)

 இன்னணஞ் சகச நிட்டை யெய்திய நந்திப் புத்தேள்
 தன்னருட் குரவ னேவற் றலைநிற்கு மியல்புந் தேறார்
 அன்னவ னூலை யாய்ந்து மாக்கைநின் றுளதேன் முத்தி
 மன்னல ரென்ப ரன்னோர் மம்மர்நோய்க் கொழிவு முண்டே.

(இ - ள்.) இவ்வாறு சகசநிட்டையினை அடைந்த திருநந்தி தேவர் தமது ஞானாசாரியர் பணித்தருளிய வண்ணம் பரமாசாரியராகிய சிவபெருமானுக்குத் திருத்தொண்டு செய்து ஒழுகுந்தன்மையையும் உணர மாட்டாதார் அத்திருநந்தி தேவர் தாம் கேட்டவண்ணம் தமது சந்தான வழியாய் உலகினுக்குதவிய சிவஞானபோதத்தை யாராய்ந்துகொண்டும், உடம்போடிருக்கின் அவர் முத்தியடைந்தவ ராகமாட்டாரென்று சொல்வார். அத்தகைய மந்தமதியுடையோரின் மயக்கமாகிய பித்து நோயினுக்கு நீக்கமும் உண்டு கொல்லோ? இல்லை.

(147)

 
 நூலினை யறிந்தார் போன்று நுண்ணறி வுடையார் போன்றும்மாலினைத் தவிர்ந்தார் போன்றும் வழியறிந் தடைந்தார் போன்றும்