ஐம்புலன்களையுடையானும், இறைவன்பால் அருளுபதேசம் பெறுவதில் வேட்கையையுடைய மனத்தினையுடையவனுமாகிய அகத்திய னென்பவன்; (வி - ம்.) திரு - அழகு. அன்றித் திருமகள் விளங்குகின்ற தாமரை என்றலுமாம். திருமகள் தாமரைப் போதில் உறைதலால், "திருக்கிளர் தாமரை" என்றார் எனக்கொள்க. செற்றுதல் - மிகுதல், ஈண்டு அடர்தல், நெருங்குதல் என்னும் பொருளது. பண்ணை - வயல். அன்றி, மருதநிலப்பரப்பு, மருவு எனற்பாலது, மருஎனக் கடைக்குறைந்து நின்றது. காசிவரைப்பு - காசிநகரின் எல்லை, காசிநகரில் என்றபடி. இதில் நகருக்குச் சிறப்புக் கூறியவாறு. "திருக்கிளர்" செற்றிய பிள்ளைகள் சூழ்ந்த காசி என்றமையால், அந்நகர் பொருட் செல்வத்தானும் கல்வி கேள்விகளால் மிக்க அருட் செல்வத்தானும் உணர்ந்தது என்பதை உணர்த்தி நின்றது. பிறரும், | 1 "நற்றவஞ்செய் வார்க்கிடம் தவஞ்செய்வார்க்கு மஃதிடம் | | நற்பொருள்செய் வார்க்கிடம் பொருள்செய்வார்க்கு மஃதிடம்." |
என, நாட்டுக்குச் சிறப்புக் கூறுதலறிக. ஒருக்குதல் - கெடுத்தல், அடக்குதல். அகத்தியமாமுனிவர் மெய்வாய் கண் மூக்கு செவி யென்னும் ஐம்பொறிகளின் வழியே உயிர்த்து உண்டு கண்டு முகர்ந்து கேட்டு அதன் வழியே சென்று விடுதலறியா விருப்பை யொழித்த மேதகையோர் என்பதை விளக்குதற்கு "ஒருக்கிய ஐம்பொறியான்" என்றார். அவர்மாட்டுப் புலன்கள் கெடப் பொறிகள் தாம் உளவாயின என்பதைக் குறிக்கப் புலனென்று கூறாது, "ஐம்பொறி" எனக் கூறினார். அருக்குதல் - அன்பு கொள்ளுதல். "அருக்குமங்கையர் மலரடி வருடியும்" என்னும் திருப்புகழடியில் அஃதிப்பொருட்டாதல் அறிக. இறைவன்பால் என்பது, அவாய் நிலையான் வருவித்துரைக்கப்பட்டது. இதனால் அகத்தியரது பெருமையாக புலனழுக்கற்ற அந்தணாளர் எனக் குறித்தவாறாம். (2) | இந்திர னாதிய ரேத்திவ ணங்கப் | | பந்தணை மெல்விர லாளொரு பாலாம் | | அந்தணன் மெல்லணை மேலமர் வேலை | | வந்தெதிர் தாழ்ந்தும கிழ்ந்திது சொற்றான். |
(இ - ள்.) இந்திரன் முதலிய தேவர்கள், வாழ்த்தி வணங்கி நிற்பந்தைத் தாங்கிய மெல்லிய விரல்களையுடைய உமையம்மையைத் தம்ஒப்பற்ற இடப்பாகத்திற் கொண்டருளிய அழகிய அருளாளரான சிவபெருமான், மென்மை பொருந்திய அரியணைமீது எழுந்தருளி வீற்றிருந்தபோது வந்து நேரில் வணங்கி மகிழ்ச்சிகூர்ந்து கீழ்க்காணப் பெறும் இதனைக் கூறலானான். (வி - ம்.) இந்திரன் ஆதியர் என்பது, வானுலகத் திறைவனான இந்திரன் முப்பத்துமுக்கோடி தேவர் நாற்பத்தெண்ணாயிரம் முனிவர் உள்ளிட்டாரை. பந்தணை மெல்விரலாள் என்றது, ஈண்டு உமையம்மையாரை. "பந்தணை விரலியும் நீயும்நின் அடியார் பழங்குடில் தொறு மெழுந்தருளிய |