போன்று ஒருநொடிப் பொழுதில் அருளும் மாண்புடைய இவ்வூர் என்றும் ஒருபொருள் கொள்க. இந்திரஞாலம் - இந்திரசாலவித்தை. (29) | தேவர்க ளுலகுக் கெல்லாஞ் செல்வங்க ளாக்கி நின்ற | | காவியங் கிரிபோல் யார்க்குங் கண்ணிய தளிப்ப துண்டோ | | ஓவிய பொறியி னீரே யும்பர்கோன் பேறு சொற்றாம் | | பாவிய புகழ்சா னாகம் பணிந்துறு பேறு சொல்வாம். |
(இ - ள்.) பொறிகளின் குறும்பினை ஒழித்த துறவோரே ! தேவர் உலகுக்கெல்லாம் செல்வங்களை உண்டாக்கிப் புகழோடுநின்ற இந்தத் திருத்தணிகை மலைபோன்று எத்திறத்தார்க்கும் அவரவர் கருதிய பேற்றினை வழங்கும் திருத்தலம் வேறொன்றுமுளதோ. இதுகாறும் இந்திரன் அருட்பேறு கூறினாம்; இனி பரவிய புகழ்மிக்க வாசுகி என்னும் பாம்பு இத்திருத்தணிகைப் பெருமானைப் பணிந்துபெற்ற பெரிய பேற்றினையும் கூறுவாம் கேண்மின். (வி - ம்.) காவியங்கிரி - திருத்தணிகைமலை. கண்ணியது - கருதியபேறு. உண்டோ என்னும் வினா. இன்றெனும் எதிர்மறைப் பொருளை வற்புறுத்து நின்றது. நாகம் - வாசுகி. (30) இந்திரன் அருள்பெறுபடலம் முற்றிற்று. ஆகச் செய்யுள் - 2075. |