பக்கம் எண் :

நாகமருள் பெறு படலம்901

 கண்டவ ரஞ்ச வலங்கொடு குன்று கதழ்ந்தேறி
 அண்டர்க ணாத னடித்துணை போற்றி யசைந்தன்றே.

(இ - ள்.) வெடித்து மலராநின்ற தாமரை மலர்ந்து நறுமணமுடைய செங்கழுநீர் மலர்ந்து வண்டுகள் கிண்டுதற்கிடமான குமார தீர்த்தத்திலே மகிழ்ந்து ஆடித் தன்னைக் கண்டோர் பெரிதும் அஞ்சாநிற்பத் திருமலையை வலம் வந்து அதன்மேல் விரைந்து ஏறித் தேவதேவனாகிய முருகவேளின் திருவடிகளை வணங்கி ஆண்டே தங்கிற்று.

(வி - ம்.) விண்டு - வெடித்து. கஞ்சம் - தாமரை. கதழ்ந்து - விரைந்து. அசைந்தன்று - அசைந்தது; தங்கிற்று.

(5)

 அன்றொழி வெய்த வகன்றுபு றத்தய லேமேல்சார்
 ஒன்றிய தண்சுனை யொன்றெதிர் கண்டவ ணுற்றாடி
 மன்றல்க மழ்ந்தக டம்பணி மார்பன்ம லர்ப்பாதம்
 நன்றுளம் வைத்துந லத்தகு மாதவ மாற்றிற்றால்.

(இ - ள்.) அற்றைநாள் இவ்வாறு கழிய மறுநாள் அவ்விடத்தினின்றும் போந்து பக்கத்தே அண்மையில் மேற்றிசையிலே பொருந்திய குளிர்ந்த சுனையொன்றனைத் தன்னெதிரே கண்டு அதன்கட் பொருந்தி நீராடி மணங்கமழாநின்ற கடப்பமலர் மாலையணியும் மார்பினையுடைய முருகவேளின் தாமரைமலர் போன்ற திருவடிகளை நன்மையோடு நெஞ்சிலே பதித்து நன்மை தக்குள பெரிய தவத்தை இயற்றியது.

(வி - ம்.) அவண் - அவ்விடத்தே. மார்பன் - முருகன்.

(6)

 பன்னெடு நாள்கழி வெய்தவு ளம்பரி விற்றீர்ப்பான்
 கன்னிம யிற்பெரு மானெதிர் போந்துக ருந்திண்மை
 மன்னுமு டற்பிணர் நீத்துவ ழங்கம கிழ்ந்தாடிப்
 பொன்னடி தாழ்ந்துபு குந்தது தன்புகழ் சால்வைப்பு.

(இ - ள்.) தவமுயற்சியிலே பல நெடியநாள் சென்ற பின்னர்த் தன்னெஞ்சத்தைத் துயரினின்றும் நீக்குதற் பொருட்டுக் கன்னிமைத் தன்மையுடைய மயிலேறும் பெருமான் முன்சென்று கரியதிண்மை பொருந்திய தன் உடலிற் செதும்பு அகன்று இயங்கவந்தமை கண்டுமகிழ்ந்து பணம் விரித்தாடிப் பெருமானுடைய அழகிய திருவடிகளை வணங்கித் தன்னுடைய புகழ் நிரம்பிய நாகநாட்டினை
எய்தியது.

(வி - ம்.) தீர்ப்பான் - தீர்த்தற்கு. கன்னிமைத்தன்மை - அழிவின்மை. வைப்பு - நாடு.

(7)

 நாகசு னைப்பெயர் நண்ணிய வத்தகு தீர்த்தத்தின்
 மேகநி றத்தின னோடுப டர்ந்துவி ழுச்சேடன்
 ஓகையி னாடியு ழந்துத வம்பல்வ ளங்கொண்டங்
 கேகன தின்னரு ளாலுல கெய்தியி ருந்தானால்.

(இ - ள்.) வாசுகி ஆடியதனால் நாகசுனை என்று பெயர்பெற்ற அந்தத் தகுதியுடைய தீர்த்தத்தின்கண் சிறந்த ஆதிசேடன் திருமா