பக்கம் எண் :


அப்பூதியடிக ணாயனார் புராணம்1017

 

நோக்கி "இவ்வுரையினை என் உள்ளம் பொறாது; அவன் என்ன செய்தனன்; இதற்கொன்றுண்டு; உண்மையை விரித்துரையும்" என்றார். அதற்கு அப்பூதியார் மெய்விதிர்த்து அஞ்சி பெரியவர் அமுது செய்யும் இப்பேறு பிழைக்க வருமே என்று விரித்துரையாராயினும், அப்பெரியயோர் கேட்கும்போது உண்மையை விளங்க வுரைக்கவேண்டும் சீலத்தினாலே மனம் நொந்து மைந்தனுக்கு நேரிட்டதனை விரித்துரைத்தனர்.

அதைத் திருநாவுக்கரசர் கேட்டு "நீர் புரிந்த வண்ணம் நன்று; இத்தன்மை செய்தார் யாவர் உளர்?" என்றருளி, எழுந்துசென்று, அவ்வுடலைத் திருக்கோயிலின்முன் கொண்டுவரச் செய்து சிவபிரான் அருளும்படி அதனை நோக்கி, "ஒன்று கொலாம்" என்று தொடங்கித் திருப்பதிகம் பாடியருளினர். உறங்கி யெழுவானைப் போன்று பிள்ளை விடம் நீங்கி உயிர்பெற்றெழுந்து திருநாவுக்கரசர் திருவடிகளை வணங்கி நின்றனன்; அதுகண்டு அவர் அவனுக்குப் புனித நீறு அளித்தனர். இப்பெரு நிகழ்ச்சியைக் காண்பார் எல்லாம் சிவபெருமான் றிருத்தொண்டி னெறியினைப் போற்றி வாழ்ந்தனர்; ஆனால் அப் பயந்தவர்களோ தெரிவரிய பெருமையுடைய அன்பர் திவேமுது செய்தற்கு இவன் சிறிது இடையூறு செய்தனன் என்று சிந்தை நொந்தனர்.

அவர்களது மனவாட்டத்தை அறிந்த அரசுகள் அவர்களுடனே ஓங்கிய திருமனையில் எய்தி அமுது செய்யும் பாங்கில் இருந்தனர். அதற்கு வேண்டிய ளல்லாவற்றையும் அப்பூதியார் மகிழ்ந்து செய்தனர். நிலத்தைக் கோமயத்தால் மெழுகி வெண்சுண்ணக்கோலமிட்டனர். அதன்மேல் வாழையின் அக்குருத்தி விரித்து நீரினாற் கழுவி ஈர்வாய் வலமுற மரபின் வைத்தனர்.

அரசுகளது ஏவலின்படியே அப்பூதியாரும் பிள்ளைகளும் அங்கு உடனே அமுது செய்ய இருந்தனர்; சிந்தைமகிழ்ந்து மனைவியார் திருவமுது எடுத்து நல்கினர்; அரசுகள் சிவனடியார்களுடனே திருவமுது செய்தருளி அப்பூதியார்க்குக் காதல் நட்பின் உரிமையளித்தனர். அவ்வாறு பன்னாள் கலந்து உடனிருந்தருளினர். பின்னர்த் திருப்பழனம் சேர்ந்து நாதரைப் பாடிய சொன்மாலைப் பதிகத்தில் அப்பூதியாரது அடிமைத் திறத்தைச் சிறப்பித்துப் பாடியாருளினார். இப்பேறுபெற்ற அப்பூதியார் தாம் அடையும் உறுதிப்பொருள் யாவும் திருநாவுக்கரசரது பாதமேயாம் என்று கொண்டு அவற்றை அன்புடன் துதித்திருந்து சிவபெருமான் றிருவருள் சேர்ந்தனர்.

கற்பனை :-1. காண்டலின்றியும், பெரியோர்களின் குணங்களைக் கேட்டதும் அவர்களிடம் அன்பு பூண்டு அவர்களை வழிபட் டொழுகுதல் சிறந்த குனமுடைமையாம்.

2. அன்பு முதலிய நற்குணங்களால் நிறைவுடைமை மட்டுமேயன்றிக் களவு பொய் கோப முதலிய தீக்குணங்களைக் காய்தலும் நன்மக்கள் இலக்கணம்.

3. பெரியோர்களது பெயரைத் தம் மக்களுக்கும் மற்றும் உடைமைகளுக்கும் இட்டு வழங்குதல் அப்பெரியோரை வழிபடும் முறைகளுள் ஒன்று.

4. தங்கள் தங்கள் பேர் எழுதிக் தண்ணீர் பந்தர் முதலிய அறங்களை செய்தல் சாதாரண உலக வழக்கு. ஆனால் தாம் செய்யும் அவ்வகை அறங்களைத் தன் பெயர் எழுதாது தாம் வழிபடும் பெரியோர்கள் பெயரை எழுதி அப்பெயரால் செய்தல் உயர்ந்தோர் முறை.

5. தண்ணீர்ப் பந்தர்கள் அளவில்லாத சனம் எப்போதும் செல்லும் வழி கரையில் வேனில் வெப்பத்தை அகற்றுவதில் அருளுடைய பெரியோர்களது உள்ளம்போலக் குளிர்ச்சியுடையனவாய்க் குளநிறைந்த நீர்த்தடம் போல் குளிர்ந்து