பக்கம் எண் :


சரித ஆராய்ச்சிக் குறிப்புக்கள்1099

 

பிற்சேர்க்கை - 1

மூன்றாம் பகுதி - இரண்டாம் பாகம்

சரித ஆராய்ச்சிக் குறிப்புக்கள்

------

22. குலச்சிறை நாயனார் :- இவரும் மங்கையர்க்கரசியாரும் நின்றசீர் நெடுமாற நாயனாரும் திருஞான சம்பந்த நாயனார் காலத்தவர்கள். அவர் வாழ்ந்த காலம் கி. பி. 6ஆவது நூற்றாண்டின் முற்பகுதி என்று ஒருவாறு சரித ஆராய்ச்சியாளர் துணிந்துள்ளார்கள்; திருநாவுக்கரசு நாயனார் புராணம் சரித ஆராய்ச்சிக் குறிப்புக்கள் பார்க்க. இவர் பதியாகிய மணமேற் குடி என்பது இப்பொழுதும் அப்பெயராலே வழங்கப்படுகின்றது. தலவிசேடம் பக்கம் 797 பார்க்க.

23. பெருமிழலைக் குறும்ப நாயனார் :- தலவிசேடம் பக். 815 பார்க்க. இந்நாயனார் சுந்தரமூர்த்திகள் காலத்தில் வாழ்ந்து அவரை உபாசித்து முத்தி பெற்றவராதலின் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் வாழ்ந்திருத்தல் வேண்டுமென்று துணியலாம்.

24. காரைக்கா லம்மையார் :- சரித ஆராய்ச்சிக் குறிப்புக்கள் பார்க்க. இவர் திருஞான சம்பந்த நாயனார் காலத்திற்கு முற்பட்டவர்.

25. அப்பூதியடிகணாயனார் :- இவர் திருநாவுக்கரசு நாயனார் காலத்தில் வாழ்ந்து அவரது வழிபாட்டினால் அவரருளைப் பெற்று முத்தி பெற்றவர். அவர் புராணத் திறுதியிற் சரித ஆராய்ச்சிக் குறிப்புக்கள் பார்க்க.

26. திருநீலநக்க நாயனார் :- திருஞான சம்பந்த நாயனார் காலத்தில் வாழ்ந்து அவரை வழிபட்டு அவர் திருமணத்தில் உடனாக முத்தியடைந்தவர். அவர் சரித ஆராய்ச்சிக் குறிப்புக்களும் திருநாவுக்கரசர் சரித ஆராய்ச்சிக் குறிப்புக்களும் பார்க்கத் தக்கன.

27. நமிநந்தியடிக ணாயனார் :- "தொண்டர்க்காணி" என்று திருநாவுக்கரசர் பாடப் பெற்றமையால் அவர்காலத்துக்குப் பலநாள் முற்பட்டவராதல் வேண்டும்; "நீராற் றிருவிளக் கிட்டமை நீணா டறியுமன்றே" (திருவிருத்தம்) என்று அரசுகள் துதித் தருளியமையால் இவர் சரிதம் அரசுகள் காலத்திலேயே மிகத் தேற்றமாக எல்லாரும் அறிந்து நம்பி வழிபடும் நிலையில் இந்நாட்டில் வழங்கப்பட்டு வந்தமையும் அறியப்படும்.

- உரையாசிரியர்

_____

திரு. இராவ்பகதூர் - C. M. இராமச்சந்திரஞ் செட்டியார் அவர்கள் அன்புடன் உதவிய குறிப்புக்களின் சுருக்கம்:

குலச்சிறை நாயனார் :- மணமேற்குடி - இது இப்பெயராலேயே இன்றும் வழங்குகின்றது; முன்னை நாளிற் பாண்டி நாட்டிற் சேர்ந்திருந்தது. நம்பி திருவிளையாடலில் இத்தலத்தில் தேன் றதும்பும் குருந்த மரங்கள் உண்டு எனப் பேசப்பட்டுள்ளது. அணிமையில் உள்ள ஆவுடையார் கோயில் என்னும் திருப்பெருந்துறையில் குருந்த மரத்தினடியில் திருவாத வூரடிகளுக்கு இறைவர் அருளிய சரிதம் நினைவு கூர்க.

தற்கால நிலை - இவ்வூர் கிழக்குக் கடற்கரையோரம் உள்ளது. மணல்மேட்டின் மேல் அமைந்ததாதலின் இடபெயர் பெற்றது. மணற் குன்றாக வைத்துக் "குருந்தவிழ் சாரல்" என்பது நம்பி திருவிளையாடல்; முன்னாளில் வடக்கிருந்து