பக்கம் எண் :


1102திருத்தொண்டர் புராணம்

 

887. வரி 35. "கால்பொரக் கலங்கி - வாகை வெண்ணெற் றொலிக்கும்" குறுந் - 7.

890. வரி. 21. கடுவன் - ஆண் குரங்கு. மந்தி - பெண் குரங்கு. "கைம்மக வேந்திக் கடுவனொ டூடி...செம்முக மந்தி" (சம். தேவா.)

919. வரி 11. பேரார்ந்த - போரார்ந்த - என்பதும் பாடம்.

923. வரி 18. சொன்முடிவொன்றில்லாத - "சொற்றெரியாப் பொருள்" (பிள். தேவா. வீழி.), "சொற்பதங்கடந்த தொல்லோன்" (திருவா.)

934. வரி 4. தன்னை யறியாத தன்மையன் - தம்பெருமை தானறியாத் தன்மையன்" (திருவா.) "தனதொரு பெருமையை யோரான்" (பிள்ளை - தேவா - மறைக்காடு).

948. வரி 5. கேளாழி நெஞ்சே - "இரவலாழி நெஞ்சமே" (பிள்ளை - தேவா - கோவல்வீர.)

1013. வரி 7. நீலநக்கர் - ... கண்டத்தில் நீலமுள்ள காரணத்தாலும் சிவபெருமானைக் குறிக்கும்.

1021. வரி 18. இது செய்ததென் பொறியிலாய் - இது செய்தது என்பொறி? இலாய்! எனப் பிரித்து, இலாய் - மனைவியே!; என்பொறி - என்னபுத்தி என்று முரைக்க நின்றது; இல்லாய் என்பன இலாய் என நின்றது.

1021. வரி 19. சுதைச்சிலம்பி - விடத்தன்மையுடைய நீர் வெளிச் செலுத்தும் வெண்ணிறமுடைய பெரிய சிலந்தி வகை.

1034. வரி 25. ஓரிடம் - (ஓர் - ஒப்பற்ற) ஒப்பற்ற இடம் என்ற குறிப்பும் பெறுதலால் அதற்கேற்க மனையில் உயர்ந்த இடம் கொடுத்தார் என்றலுமாம்.

1037. வரி 42, 43. என்றும் புதிய செந்தமிழ் - எக்காலத்தும் அற்புதகரமாய் விளங்கும் தமிழ்வேதமாகிய தேவாரம். புதுமை - சம்பந்தர் பாக்களின் தன்மை.

1049. வரி 9. எண்டிசையும் ஏறூர் - "இசையாற் றிசைபோய துண்டே" (சிந்தாமணி).

1052. வரி 31. சாமகண்டர் - கண்டர் - வீரர். "கங்கைசடைக் கரந்தகண்டர்" (பிள்ளை. தேவா - ஆரூர்).

1055. வரி 27. அங்கணைந்தோர் மனை - அங்கண் - நைந்தோர் மனை எனப் பிரித்து நைந்தராகியவர் மனை - அழிந்த நிலைமை யமணர்மனை) என்றும், (நைந்து - மனம் நைந்து இரப்பஞ்சி) என்றும் பிரிக்கவும் வரும்.

1059. வரி 30. விளக்குப் பணிமாற - இந்நாள்காறும் நெய்யிட்டு எரிந்த விளக்குப் பணி இன்று நீரிட்டு உரிக்கும் பணியாக மாற என்பதும் தொனி.

1061. வரி 41. விளக்கு ஒன்று - ஒன்று - முதல்விளக்கு என்றலுமாம்.

குறிப்பு : இவற்றை அன்பர்கள் ஏற்றபெற்றி அங்கங்கே அமைத்துக் கொள்வார்களாக.

______