பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) கண்ணும் ஒளியும் காட்சியும் - இறைவன் காண்பவனாகியும் காட்டுபவனாகியும் காட்சிப்பொருளாயும் நிற்கும் நிலை. பண் - திறல் - இசையும் அதன் பயனும். திறல் - திறம் என்று கொண்டு ஐந்து சுரமுள்ள இசைவகையினைக் குறிப்பதென்பாருமுண்டு. பழம் - சுவை. குணியும் குணமும்போல அத்துவிதமாகக் கலந்துநிற்கும் முறைக்கும் எடுத்துக்காட்டு. மண் - தீ - நீர் - மாருதம் - விண் - ஐம்பெரும்பூதங்கள். விண்ணிழி - அரியால் தேவ ருலகத்தினின்றும் கொணர்ந்து அமைத்துப் பூசித்த கோயில் என்பது வரலாறு. திருமால் சக்கரம் பெறவேண்டித் தவஞ்செய்து கண்ணையிடந்து அருச்சித்துப் பெற்ற இத்தல வரலாற்றை இப்பதிகத்து 6 - 7 - பாட்டுக்களில் உரைப்பதனையும் காண்க. - (2) ஆலை....நாமத்தான் - ஐந்தெழுத்து - சிவனது நாமம். அன்புடையார்க்கு அது கரும்புச்சாறு போல இனிக்கும். சீலம் - சிவனது நாமம். அன்புடையார்க்கு அது கரும்புச்சாறு போல இனிக்கும். சீலம் - சிவநாமத்தை அவ்வாறு இனிக்கக் காணும் சீலம்; தவ ஒழுக்கம். - (3) தண்மை - வெம்மை - இருவேறு தன்மையும் ஆதல் எல்லாம் தாமே என்பது குறிக்கும். எண்ணில் சமண்தீர்த்து என்னை யாட்கொண்டான் - நாயனாரது சரித அகச்சான்று. - (4) மாது இசைந்த மாதவம் சோதித்தான் - கந்தபுராணம் தவங்காண்படலம் பார்க்க. - (5) நித்தல் மணவாளனென நிற்கின்றான் - இத்தலத்துச் சிறப்பாகிய மணவாள மூர்த்தி (கல்யாண சுந்தரர். நின்ற திருக்கோலம்). "நித்த மணாளர் நிரம்ப வழகியர்" (திருவாசகம்). கண்துஞ்சும் - "அலைகடனடு வறிதுயிலமரரி" (பிள் - தேவா). (6) கண்துஞ்சும்...அருளுவான் - தல சரிதம். (7) கற்பொலிதோட் சலந்தரனைப் பிளைந்த ஆழி - இத்தல வரலாறு. "செருமேவு சலந்தரனைப் பிளந்துசுட ராழி" (நம்பி - தேவா). - (8) இருப்பு மனம் - இரும்புபோலத் திணிந்த மனம். வினையர் - வினயாளர் புத்தன் - சாக்கிய நாயனார். சல்லி - கல். புதுமலர்களாக்கினான் - "கல்லினா லெறிந்து கஞ்சிதா முணுஞ் சாக்கியனார்" (குறுக்கை - நேரிசை 6) "அல்லாதார் கல்லென்ப ரரனர்க்கஃ தலராமால்" (சாக் - புரா - 14). - (9) சந்திரனை...அருள் செய்தான்காண் - தக்க யாகத்தில் வீரபத்திரரால் நிகழ்வித்த வீரங்கள். - ஈங்கை - இண்டங்கொடி. ஒங்காரன் - ஒங்காரம் - பிரணவம். பிரணவப் பொருள். VIII திருச்சிற்றம்பலம் | திருத்தாண்டகம் |
| மானேறு கரமுடைய வரதர் போலு மால்வரைகால் வளைவில்லா வளைத்தார் போலுங் கானேறு கரிகதற வுரித்தார் போலுங் கட்டங்கங் கொடிதுடிகக் கொண்டார் போலுந் தேனேறு திருவிதழித் தாரார் போலுந் திருவீழி மிழலையமர் செல்வர் போலும் ஆனேற தேறு மழகர் போலு மடியேனை யாளுடைய வடிக டாமே. |
1 | கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலுங் கயாசுரனை யவனாற்கொல் வித்தார் போலுஞ் செய்வேள்வித் தக்கனைமுன் சிதைத்தார் போலுந் திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தார் போலும் மெய்வேள்வி மூர்த்திதலை யறுத்தார் போலும் வியன்வீழி மிழலையிடங் கொண்டார் போலும் ஐவேள்வி யாறங்க மானார் போலும் மடியேனை யாளுடைய வடிக டாமே. |
4 திருச்சிற்றம்பலம் |