எல்லையில்லாப் பெரும் புகழார் - நாயன்மார்களிருவரின் புகழ்கள் எல்லையில்லாதன. மறைகள் ஒதவல்ல புகழும், இறைவன் திருவாக்கினையே தமது திருவாக்காகக்கொண்டு செயல் புரியும் புகழும். சரித நிகழ்ச்சி குறித்தது. ஆளுடைய பிள்ளையார் புராணம் 591 - 592 திருப்பாட்டுக்களில் ஆசிரியர் இக்கருத்தையே விரித்தருளுவது காண்க. 266 1532. | ஆங்கப் பரிசை யறிந்தருளி யாழித்தோணி புரத்தரசர் "ஒங்கு வேத மருச்சனைசெ யும்பர் பிரானை யுள்புக்குத் தேங்கா திருவோ நேரிறைஞ்சத் திருமுன் கதவந் திருக்காப்பு நீங்கப் பாடு மப்பர்!" என நீடுந் திருநா வுக்கரசர்; | 267 1533. | உண்ணீர் மையினாற் பிள்ளையா ருரைசெய் தருள வதனாலே "பண்ணினேரு மொழியா" ளென் றெடுத்துப் பாடப் பயன்றுய்ப்பான் றெண்ணீ ரணிந்தார் திருக்காப்பு நீக்கத் தாழ்க்கத், திருக்கடைக்காப் "பெண்ணீ ரிரக்க மொன்றில்லீர்"என்று பாடி யிறைஞ்சுதலும். |
268 1534. | வேத வனத்தின் மெய்ப்பொருளி னருளால் விளங்கு மணிக்கதவங் காத லன்பர் முன்புதிருக் காப்பு நீங்கக், கலைமொழிக்கு நாதர் ஞான முனிவருடன் றொழுது விழுந்தார்; ஞாலத்துள் ஒத வொலியின் மிக்கெழுந்த தும்ப ரார்ப்பு மறையொலியும். |
269 1532. (இ-ள்.) ஆங்கு அப்பரிசை அறிந்தருளி - அங்கு அத்தன்மையினை அறிந்தருளி; ஆழித் தோணிபுரத்து அரசர் - கடல் வெள்ளத்தின் மிதந்த திருத்தோணிபுரத்து அரசராகிய ஆளுடைய பிள்ளையார்; "அப்பர்! " - அப்பரே!; "ஒங்கு...பாடும்" என - ஒங்கும் வேதங்கள் அருச்சித்த தேவதேவராகிய பெருமானைக் கோயிலினுட் புகுந்தது தடையில்லாமல் நாமிருவோமும் நேர்வாயிலில் வணங்குதற்பொருட்டு, திருமுன்பு உள்ள கதவம் திருக்காபப்பு நீங்கும் படி பாடி யருளுவீராக!" என்று கூற; நீடும் திருநாவுக்கரசர் - புகழால் நீடும் திருநாவுக்கரசர் பெருமானும், 267 1533. (இ-ள்.) உள் நீர்மையினால் பிள்ளையார் உரை செய்தருள ஆளுடைய பிள்ளையார் அன்பின் தன்மையினால் இவ்வாறு உரைத்தருளினாராக; அதனாலே - அதுபற்றி; "பண்ணின் நேரும் மொழியாள்" என்று எடுத்துப்பாட - "பண்ணினைப் பொருந்திய மொழியாள்" என்று தொடங்கிப் பாடவும்; பயன்துய்ப்பான் தெண்ணீர் அணிந்தார் திருக்கதவம் நீக்கத் தாழ்க்க - அப்பதிகப் பாடலின் பயனை அனுபவிக்கும் பொருட்டுத் திருக்கதவத்தைத் திருக்காப்பு நீக்கித் திறப்பதனைத் தாழ்க்க; திருக்கடைக் காப்பு....இறைஞ்சுதலும் - திருக்கடைக் காப்பிலே "எண்ணீர்! இரக்கமொன் றில்லீர்!" என்று பாடி இறைஞ்சின வளவில், 268 1534. (இ-ள்.) வெளிப்படை. வேதாரணியத்தில் விளங்கும் மெய்ப்பொருளாகிய இறைவரது திருவருளினாலே, விளக்கமுடைய மணிக்கதவமானது, காதலுடைய அன்பர்களின் முன்பு திருக்காப்பு நீங்கவே, கலைமொழிக்கு வேந்தராகிய நாயனார் ஞானமுனிவராகிய பிள்ளையாருடன் தொழுது விழுந்து பணிந்தார்; உலகில் கடலோசையினும் தேவர்களது ஆரவாரிப்பும் வேதவொலியும் கூடி மிக்குமேல் எழுந்தது. 269 இந்த மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |