பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்453

 

பொருளை முன் வைத்தல், பயன் துய்ப்பான் - அப்பரின் தமிழ்ச்சுவையை அருந்துதற் பொருட்டு என்றுரைப்பாருமுளர். அது நாயனாரது பாடல்களெல்லாவற்றுக்கும் பொதுவிலக்கணமாதலின் ஈண்டைக்குச் சிறப்பின் றென்க. கதவு தாழிட்டு உள்ளே உணவுண்பான், இடையில், வெளியே நின்று கதவு திறக்கு மாறு ஒருவன் கூவுவானாயின், உண்ணுமிடையில் அதனை விட்டுக் கதவு திறக்கத் தாழ்க்கும் உலகியல்பு பற்றி எழந்த உபசாரத்தால் கூறியது.

தெண்ணீர் - தெளிந்த நீரையுடைய கங்கை. "தேசுடைத் தெனினுந் தெளிவில்லதே" (58) என்றபடி ஏனை ஆறுகளில் நீர் பெருக்குக்காலத்தில் கலங்கிவருவது போலன்றி, வேனிற்காலத்தில் இமயத்தின் பனிக்கட்டிகள் உருகி வருதலினால் தெளிந்து பெருகும் கங்கையாற்றின் சிறப்பியல்பு குறித்தது.

திருக்காப்பு நீக்கத் தாழ்க்க - நீக்க - நீக்குதலைச் செய்ய; காப்பு நீக்குதல் - திறத்தல். மறைகளாற் பூசிக்கப்பட்டுக் காப்பிடப்பட்டதனை நீக்கித் தம்மை வெளிப்படுத்துதல்.

திருக்கடைக்காப்பு - இறுதிப்பாட்டு, பதிகத்தை முடித்துக் கூறுவதனால் காப்பு எனப்படுவது மரபு.

"எண்ணீர் இரக்கம் ஒன்றில்லீர்" என்று இது திருக்கடைக்காப்பின் கருத்தும் குறிப்புமாம்.

இறைஞ்சுதலும் - இறைஞ்சினவுடன். "இரக்கமில்லீரே" என்று பாடியதுடன் "கதவம் திறம்பிம்மினே" என்று விண்ணப்பமும் செய்து பணிந்தனர் என்க.

இரக்கமில்லரே - என்பதும் பாடம்.

268

1534. (வி-ரை.) மெய்ப்பொருள் - பூட்டிய இறைவரது வேதமும், திறப்பத்த தமிழ் வேதமும் ஒரே உண்மைப் பொருளைக் கூறுவன என்று யாவரும் கண்டுய்யும்படி காட்டுவதனால் மெய்ப்பொருளின் அருளால் என்றார்.

அன்பர் - அன்பர்களாகிய இரு பெருமக்களுடைய. காதல் - "தேங்கா திருவோம் நேரிறைஞ்ச" என்று கொண்ட ஆர்வத்தின் மிகுதிப்பாடு.

கலைமொழிக்கு நாதர் ஞான முனிவருடன் - அரசுகள் திருப்பாடலினால் கதவம் திருக்காப்பு நீங்கப் பாடியதனாலும், முன்நின்று பாடிய அவர் அக்காட்சியை முன்னர்த் காண்ப தியல்பாதலானும், நாயனாரை முன்வைத் தோதினார். தொழுதலும் விழுதலும், பின்வரும் பாட்டிற் கூறும் எழுந்து உள்புகுதல் முதலாயினவும் இருவர் பாலும் ஒக்க நிகழ்ந்தனவாதலின் ஞானமுனிவருடன் என உடனிகழ்ச்சிப் பொருள் பற்றிவந்த உடன் உருபு புணர்த்தி ஒதினார். உடனிகழ்ச்சியாயினும் இது நாயனார் புராணமாதலின் ஞான முனிவருடன் நாதர் என்னாது நாதர் முனிவருடன் என்றருளினர்.

தொழுது விழுந்தார் - "தொழுதெழுவாள்" என்புழிப்போலத் தொழுது கொண்டே விழுந்தார் என்ற பொருளில் வந்தது.

ஞாலத்துள் - உம்பர் ஆர்ப்பும் மறை ஒலியும் - மிக்கு எழுந்தது - என்க. புவனியில் வந்து வணங்குவார் தேவர்; அவர் ஆர்த்தனர்; மறைக்காடாதலின் அங்கு என்றுமுள்ள மறை ஒலி, எந்நாளினும் மிக்கு, அன்று எழுந்தது; ஞாலத்துள் ஒதவொலி என்றது இத்தலத்தின் அருகே கரையில் முழங்கும் கடல் ஒலி என்ற குறிப்பாகும். ஆர்ப்பும் ஒலியும்கூடிய சத்தமாதலின் எழுந்தது என ஒருமையாற் கூறினார்.

தோணிபுரத்தரசர் - நாவரசரை நோக்கிக் கூறியதும், அதனாலே அரசுகள் "இரக்கமில்லீரே" என்று பாடி யீறைஞ்சுதலும், பதிக முற்றியபின் வேதவன