பக்கம் எண் :

3. கர்வம் (மானம்)

4. தற்புகழ்ச்சி (ஒளத்தத்தியம்)

5. அறியாமை (அஜ்ஞானம்)

மேலே கூறிய பத்து மனோபாவங்களும், ‘தசஸம்யோ ஜனங்கள்’ எனப்படும். ஸம்யோஜனங்கள்- விலங்குகள். இந்த மனோபாவங்களால் உலக வாழ்வில் பற்று உண்டாகின்றது.

தேர்ந்து மேலே உயரவேண்டிய ஐந்து (பஞ்ச பலங்கள்);

1. சிரத்தை, 2. சாமர்த்தியம், 3. ஞாபகம், 4. மனனம், 5. ஊகித்தல் அல்லது ஞானம்.

கடக்க வேண்டிய ஐந்து தளைகள்;

1. அவா (ராகம்)

2. வெறுப்பு (துவேஷம்)

3. மயக்கம் (மோஹம்)

4. கர்வம் (மானம்)

5. பொய்க்காட்சி (திருஷ்டி)

இந்த ஐந்துக்கும் பதிலாக உருவம் (ரூபம்), உணர்ச்சி (வேதனை), நினைப்பு (ஸம்ஜ்ஞை), முற்குறிப்பு (ஸம்ஸ் காரம்), அறிவு, (விஞ்ஞானம்) என்ற ஐந்து ஸ்கந்தங் களையும் கூறலாம்.