எப்படியோ, அப்படிப் பௌத்தர்களுக்கு இது முக்கியமானது. பகவத் கீதையைப் போலவே, இதுவும் ஐரோப்பா ழுழுவதிலும் புகழ் பெற் றிருக்கிறது. புகழ் பெற்ற ஆசிரியர்கள் இதை லத்தீன், ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு முதலிய ஐரோப்பிய மொழிகளில் பெயர்த்து வெளியிட் டிருக்கின்றனர். ஆங்கில மொழியில் மட்டுமே இதற்கு 40-க்கு மேற்பட்ட மொழி பெயர்ப்புக் கள் உண்டு. இதைப் புகழ்ந்து போற்றாத ஆசிரியரைக் காண்பது அரிது. திரிபிடகத்தில் புத்தருடைய உபதேசங்கள் பல உரையாடல் களாக இருக்கின்றன. இவைகளையெல்லாம் பொறுமையோடு, நிதானமாகப் படித்து அறிந்து கொள்வதைப் பார்க்கினும் தம்ம பதத்தின் சூத்திரங்களைப் படித்தல் எளிது. இந்தச் சூத்திரங்கள் சுருக்கமாயும், பொருள் நிறைந்தும், விறு விறுப்பாயும், உணர்ச்சிமயமாயும், கவி தைப் பண்புடனுமிருப்பதால், இவைகளைப் பலரும் விரும்பிப் படிப்பது இயற்கை. மேலும் பௌத்த சமயக் கொள்கைகள் பலவற்றையும், வாழ்க்கைக்கு வேண்டிய நீதிகளையும் இவை களிலே தெளிவாய்க் காணலாம். தம்ம பதத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கவேண் டிய நூல் தமிழ் மறையாகிய திருக்குறள். ‘இது நமது மொழியிலுள்ள திருவள்ளுவரது திருக் குறளைப் போன்று அத்துணைச் சிறப்பு வாய்ந்தது.’1 தம்ம பதத்தின் பெருமையைப் பற்றி ஜெர்மன் மொழியில் புத்த சரித்திரத்தை எழுதிய ஹெர்மான் ஒல்டன்பர்க் என்ற பேராசிரியர்
1. திரு.எஸ்.வையாபுரிப்பிள்ளை; ‘இலக்கிய உதயம்’, பகுதி-2. |