பக்கம் எண் :

   

வினையியல்

தனிவினை - தொடர்வினை

65தனிவினை தொடர்வினை எனஇரு வினையினும்
நடவா முதலிய முதல்நிலைத் தனிவினை;
விகுதிமுத லானவை கூடின தொடர்வினை.

என்பது வெளி.

[வினை என்பது முதல்நிலையை; இஃது ஆகுபெயராய்த் தன்னால் பிறக்கின்ற சொல்லை உணர்த்திற்று. வினை பலவாறு இயலுமாற்றை உணர்த்தலின் வினையியல் எனப்பட்டது. வினை தனிவினை, தொடர்வினை என இருவகைத்து, நட, வா முதலிய முதல்நிலைகள் தனிவினை. முதல்நிலையோடு விகுதி முதலியவை கூடின் தொடர்வினை எனப்படும்.] 1

முதல்நிலைத் தனிவினைப் பாகுபாடுகள்

66முதல்நிலைத் தனிவினைக் குணம்மொழி குறினே
முதல்நிலைத் தொழிற்பெயர்1, முன்னிலை ஏவல்
ஒருமைமுற்று2, அன்றியும் வேறுவினை முற்றோடு3,
இருவகை எச்சம்4, அவ் வெச்சம்முற் றுக்களுள்
முதல்நிலை பிரிந்தஅம் முதல்நிலைத் தொழிற்பெயர்
வினைமுதல் ஆதியா வெவ்வேறு ஆதல்5,
எட்டுஉருபு ஏற்றே எண்பொருள் ஆதல்6,
செயப்படு பொருள்குன் றாமையும், குன்றலும்,
பொதுவும் இடம்குன் றாமையும், ஆதல்7,
பலபொருட்டு ஒன்றும்ஓர் பொருட்கே பலவும்,
ஆதலும்8, பகாப்பதம் ஆதலும்9 அன்றி
இயல்பினும் திரிபினும் பகுதிஎன்று ஆதல்10
ஆதியாப் பலவே ஆகும் என்ப.