பக்கம் எண் :

   

ஒழிபியல்

தமிழில் வடமொழி

87பொதுஎழுத்தானும் சிறப்பெழுத் தானும்
ஈரெழுத் தானும் இயைந்தும்மொழி பெயர்த்தும்
பொதுஎழுத் துள்ளும் பொதுவாய்த் திரிந்தும்
தமிழ்ச்சிறப்பு எழுத்துஐந் தானும் திரிந்தும்
மொழிமுதல் இடைகடை எனும்மூன்று இடத்தும்
தோன்றல் முதலா விகாரம் தோன்றியும்
வருமே தமிழில் வடமொழி என்க.
 

எ-டு:

மணி - பொது எழுத்து;

நதி - சிறப்பெழுத்து;

ஆதி - ஈரெழுத்து;

பிறிதின் இயைபு நீக்கம், பிறிதின் இயைபின்மை நீக்கம் [அந்நிய யோகவியவச்சேதம், அயோகவியச்சேதம் என்பனவற்றின் மொழிபெயர்ப்பு, - பி.வி.50-இ.வி.323]

மாலை, நாரி - [மாலா, நாரீ] என்பன பொது எழுத்துள்ளும் பொதுவாய்த் திரிந்தன.

அற்புதம் விகற்பம் - [அத்புதம், விகல்பம் என்பனவற்றின் திரிபு]

சிவன், நாராயணன் - [சிவ; நாராயண:- திரிபு]

தமிழ், அமிழ்தம் - [திரமிடம், அமிர்தம் - திரிபு]

தெய்வம், யந்திரஊர்தி - [தைவம், யந்த்ரஊர்தி - திரிபு

கொங்கணம் - [கோங்கணம் என்பதன் திரிபு]