நூலமைப்பு பதினேழாம் நூற்றாண்டில் வரையப்பட்ட இலக்கணக் கொத்து என்னும் சொல்லதிகாரம் பற்றிய சிறு நூல் அந்நூற்றாண்டுவரை தமிழில் வந்துள்ளசொல்லமைப்பு சொற்றொடர் அமைப்பு என்பன பற்றிய பல அரிய செய்திகளை 131 நூற்பாக்கள் வாயிலாகவும், அவற்றின் உரைவாயிலாகவும் வெளிப்படுகிறது. இந்நூல், பாயிரமாக அமைந்துள்ள பன்னிரண்டு நூற்பாக்களோடு வேற்றுமையியல் - வினையியல் - ஒழிபியல் - என்ற முப்பகுப்புக்களை உடையது. தொடக்கத்தில் தாம் பிறவிப்பிணி நீங்கி வீடுபேறு அடைவதற்குத் தமக்கு அருள் புரியுமாறு முறையே விநாயகப் பெருமானையும் சிவபெருமானையும் முருகப்பெருமானையும் ஆசிரியர் வணங்குகிறார். அடுத்துத் தமக்கு ஞானகுருவாய் அருள்செய்த திருவாவடுதுறை அம்பலவாண தேசிகரையும், தமக்கு வடமொழி ஆசிரியராய் அமைந்த கனகசபாபதி சிவாசாரியாரையும், தமிழாசிரியராய் அமைந்த மயிலேறும்பெருமாள் மகிபதியையும் வணங்கி, அவர்தம் அருள்பெற்று இலக்கணக் கொத்து என்னும் பெயரிய இந்நூலை இயற்றத் தொடங்குகிறார். வடமொழியும் பதினெண்திசை மொழிகளுள் ஆகிய பத்தொன்பது பாடைகளின் இலக்கணங்களிடையே மாறுபாடு உண்டு. ஒவ்வொரு மொழியிலும் தோன்றும் பல நூல்களிடையும் மாறுபாடு ஏற்படும். ஐந்திலக்கணம் கூறும் ஒவ்வொரு நூலினும் எழுத்து - சொல் - பொருள் - யாப்பு - அணி என்ற ஐந்தனுள் ஒன்றற்குஒன்று மாறுபடுதலும் உண்டு. ஓரதிகாரத்தின் கண்ணும் |