அவள் பத்து மாதங்களுக்குள் மீண்டும் ஒன்றுக்கிருக்கத் தடை எதனால் வீழ்ந்தார்களோ மறுபடியும் அதே வேறு பெயரில் நல்ல வேளை நான் வீட்டிலேயே இருந்துவிட்டேன் ஆனால் திடீரென்று சாலைகளில் அழுத்தமான வண்ணத்தில் இருக்கும் அவை கட்டணம் அதே பத்துக் காசுகள் அதே வீரய்யாவோ வெங்கய்யாவோ உள் நுழைந்தேன் கால் வைத்த இடமெங்கும் நீக்கமற நிறைந்த அழுக்கும் வாசனையும் உடன் வெளியேறினேன் காக்கி நிக்கர்காரன் பத்துக் காசு என்றான் இந்த அசுத்தத்திற்குள் என்னால் போக இயலவில்லை உனக்கெதற்குப் பத்துக் காசு என்றேன் அந்தக் கணக்கெல்லாம் இங்கே செல்லாது உள்ளே போனால் கட்டணம் என்றான் நான் கோபத்துடன் மறுத்தேன் அதற்குள் தொப்பியுடன் இரண்டு காக்கிகள் யாரைய்யா இங்கே தகராறு செய்வது அரசாங்கக் கழிப்பிடத்திற்கெதிராய் அவசர மாற்றப் புதுச்சட்டத்தின் கீழ் உள்ளே தள்ளு இவனை ஒன்றுக்கு வெளியே நான் உள்ளே சரித்திரம் தலைகீழானாலும் மீண்டும் தலைகீழாகும் |