பக்கம் எண் :

110ஆத்மாநாம் படைப்புகள்

இதோ ஒரு கவிதை

இதோ ஒரு கவிதை இப்போது இவ்வறையில் பேசிக்கொண்டிருக்கும் நானும் நீங்களும் நாமிருவரும் என்றால் கோபம் கொள்ளும் இவ்வறை ரகசியங்கள் பதிவுசெய்து நடுவில் நமக்கு மட்டும் கேட்கும் குரல் அது, நம் குரல் தான் ஏன் எப்படி கேட்காதீர்கள்விளக்கினால் புரியாது விளக்கினால் தெளியாது இன்னும் யுகங்கள் பல இங்கிருப்பினும்யுகத்திற்கு எத்தனை பூஜ்யங்கள் எனப் பாட்டனுக்குத்தான் தெரியும் பின்னர் எங்கிருப்பேன் எப்படியும் சிலர் இப்படி இருப்பார்கள் என நம்பிக்கை இதுவா கவிதை என்ன இருக்கிறதுஇதில் எதையும் தேடாமல் சும்மா படியுங்கள் உங்கள் மூக்குக் கண்ணாடிகளை உடைக்கும்வார்த்தைகள் இதோ கழற்றி எறியுங்கள் சீக்கிரம் அப்போதுதான் தெரியும் தூக்கில்தொங்கும் தமிழ் வாத்யார் தொடரும் இன்னும் வரும் நாளை நமதே.

இது ஆண்கள் கழிவிடம்
பக்கத்தில் பெண்கள் கழிவிடம்
நகரத்தில் நாற்சந்திகளில்
படத்துடன் கட்டிடங்கள்
துப்புரவாளர் வீரய்யன்
எட்டு முதல் ஐந்து வரை
கட்டிய நகரச் சபைக்குப்
பத்துக் காசு வருமானம்
சுத்தமாய் நின்று எதிர்ச் சுவரில்
மூத்திரம் இருங்கள்

இப்போது போதுமிது
மீண்டும் பார்ப்போம்
உங்கள் கண்கள் காதுகள் சிவக்க