கேள்விக்குறி மழை பொழிய வேண்டுமென்று எழுத்தில் மழை பொழிய வேண்டுமென்று மையைக் கொஞ்சம் நனையவிட்டேன் வெளிர்ப் பச்சை நிறத்தில் காகிதத்தில் பரவியது வர்ணத்தில் மழை பொழிந்துகொண்டிருந்தது ஒரு பகுதியில் நீலத்தைத் தெளித்தேன் இன்னொரு புறத்தில் கறுப்பை உதறினேன் மற்றும் ஓர் புறத்தில் சிகப்பை வண்ண வண்ணமாய் மழை பொழிந்துகொண்டிருந்தது அப்பொழுது ஒரு பொருள் குறுக்கே வந்தது மழை அப்பொருளின் வண்ணமாயிற்று மாறிவரும் மழையின் முதல் வண்ணம் என்ன என்று ஒரு கணம் நிதானித்தேன் வர்ணமற்று மழை பொழிந்துகொண்டிருந்தது வர்ணங்களற்ற அம்மழை குளிர்ச்சியாய் இருந்தது தொடர்ந்து அம்மழை மனத்தில் பெய்துகொண்டேயிருந்தது வெளியே வண்ண வண்ணமாய் மழை ஒவ்வொரு கணமும் நிதானித்துக்கொண்டிருந்தேன் உள்ளும் புறமும் அற்ற ஒரு பொருள் உருவாக்கம் கொண்டது |