குந்தர் க்ராஸ் விற்பனை நான் விற்றுவிட்டேன் (எனக்குச்) சொந்தமான அனைத்தையும் மொத்தமாக நான்கு மாடிகள் ஏறி வந்தனர் மூச்சு வாங்க இருமுறை மணியடித்து அதற்குரிய காசை தரையில் வைத்தனர் ஏனெனில் மேஜைகூட விற்றாகிவிட்டது. நான் அவற்றையெல்லாம் விற்கும்பொழுது இங்கிருந்து ஐந்தாறு தெருக்கள் தள்ளி அவர்கள் கடத்திக்கொண்டிருந்தனர் சிறிய அப்பாவி மனிதர்களின் தனிப்பட்ட நிழல்களை அறுத்தெறிந்தனர் நான் விற்றுவிட்டேன் எனக்குச் சொந்தமான அனைத்தையும் மொத்தமாக மேலும் என்னிடம் பெறப்படுவது எதுவுமில்லை என்னுடைய கடைசி அணுவளவான பொருள்கூட பக்தியுடன் நெடுநாள் பாதுகாத்த நினைவுப்பொருள் இறுதியில் நல்ல விலை பெற்றுத் தந்தது. எனக்குச் சொந்தமான அனைத்தும் விற்கப்பட்டது இப்போது மொத்தமாக. என் பழைய நாற்காலிகள் - அனுப்பினேன் மூட்டை கட்ட ஆடை அலமாரிகள் - கோணியால் சுற்றினேன் படுக்கைகள் - பிரித்தேன் அவற்றை வெளியே வைத்து பக்கத்தில் அமர்வேன் மிதமானவனாக இறுதியில் எனக்குச் சொந்தமான அனைத்தும் விற்றாகிவிட்டது சட்டைகள் கழுத்துப்பட்டையின்றி மிக மோசமாக கால்சட்டைகள் இப்போதைக்கு நன்கு தெரிந்ததுதான்: பசுமையான இளம் சிவந்த கட்லெட்டிற்கு என் வாணலியை இலவசமாய்க் கொடுத்தேன். என்னிடம் மீந்ததெல்லாம் இவ்வளவுதான். |