பக்கம் எண் :

74ஆத்மாநாம் படைப்புகள்

தலைப்பு: வசதிக்காய்த் தெருவிளக்குகள்

தூரத் தெருவிளக்குகள்
இரவில் இரும்பு மனிதர்கள் ஆகின்றன
கையில் நிழற்சுமையுடன்
இரவைக் காவல் காக்கின்றன
பகலிடமிருந்து

காலை மெல்லப் புலர்கிறது
கொஞ்சம் கொஞ்சமாய்த்
தெருவிளக்குகள் இறந்துவிடுகின்றன
கண்ணுக்கே தெரியாத்தொலைவு சென்றுவிடுகின்றன

மீண்டும் இரவு
மெல்ல மெல்ல வருகிறது
வெளிச்சத்தை விரட்டிக்கொண்டு
மீண்டும் எங்கிருந்தோ
வந்து குதிக்கின்றன
தெருவிளக்குகள் இரவைப் பாதுகாக்க