காக வேதம் எழும்பும் நற்காக்கைக் கூட்டம் சிற்சில வேர்க்கடலைக்காக நோயுற்ற மனிதரெல்லாம் தங்களைத் தேற்றிக்கொண்டார் எழும்பிடும் மேலே தாவும் அணியணியாய்க் கடற்காற்றின் உப்பொடு காத்திருக்கும் இன்னும் சில பருக்கைக்காகக் கடைசியாய்ப் பறந்த காக்கை உரத்துச் சொல்கிறது தான் ஒரு காக்கை என்று |