பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்33

இவைகள் மருதத்திணைப் பாடல்கள். மருத நிலத்திலேதான் முதல் முதல் நாகரிகம் தோன்றி வளர்ந்தது; நல்ல அரசுமுறை ஏற்பட்டது; அதன் பிறகுதான் மற்ற நிலங்களிலே நாகரிகம் பரவிற்று; நீர்வளமும்நிலவளமும் உள்ள இடத்திலேதான் நாகரிகம் வளர்ச்சியடையும்; இந்த வரலாற்றுண்மையையும் இந்த ஐங்குறுநூற்றுப் பாடல்களால் அறியலாம்.

உயிர்களின் இயல்பு

பண்டைத் தமிழ்ப் புலவர்கள் தாம் உண்மையென்று உணர்ந்தவற்றையே பாடல்களில் அமைத்துப் பாடுவர். பொய் புனையும் வழக்கம் அவர்களிடம் இல்லை. அவர்கள் பல சிற்றுயிர்களின் இயல்புகளைக் கூட அறிந்திருந்தனர். அவர்களுடைய பாடல்களிலே இவ்வுண்மையைக் காணலாம்.

‘‘தாய் சாப்பிறக்கும் புள்ளிக் கலவனொடு
பிள்ளை தின்னும் முதலைத்து அவன்ஊர்’’                           (பா. 24)

‘‘கருவீன்ற நண்டு சாகும்; தன் குட்டியைத் தானே தின்னும் முதலையை உடையது அவன் ஊர்’’ என்று கூறுகின்றன இவ்வடிகள்.

‘‘தன்பார்ப்புத் தின்னும் அன்பின் முதலை’’                           (பா. 41)

இதுவும் முதலை தானீன்ற பிள்ளையைத் தானே தின்னும் என்னும் செய்தியைக் கூறுகின்றது.

‘‘செந்நெல் அம் செறுவில் கதிர்கொண்டு கள்வன்
தண்ணக மண் அளைச் செல்லும்.                                  (பா. 27)

செந்நெல் விளைந்திருக்கின்ற அழகிய வயலிலே உள்ள நெற்கதிர்களை நண்டுகள் பற்றிக்கொண்டு, குளிர்ந்த தன்னுடைய மண் வளைக்குள்ளே புகும். ‘‘ இதனால் நண்டுகள் நெற் கதிர்களை நறுக்கும் என்ற செய்தி சொல்லப்பட்டது.

‘‘மழை வரவு அறியா மஞ்ஞை ஆலும் அடுக்கல்                     (பா. 298)