பக்கம் எண் :

50எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

தாயும் அப்படுக்கையில் ஏறினாள். கணவனுடைய முதுகுப்புறத்தைத் தழுவிக்கொண்டு படுத்தாள்.

கண்டிசின் பாண! பண்புடைத் தம்ம!
மாலைவிரிந்த பசுவெண் ணிலவில்
குறும்கால் கட்டில் நறும்பூம் சேக்கைப்
பள்ளி யானையின் உயிரா அசைஇப்
புதல்வன் தழீஇனன் விறலவன்;
புதல்வன்தாய் அவன்புறம் கவைஇ யினளே!                         (பா. 359)

கணவன் மனைவிகளுக்குள் ஒற்றுமை நிலவப் புத்திரப்பேறு ஒரு சாதனம் என்ற கருத்து இப்பாட்டில் அமைந்திருப்பதைக் காணலாம்.

பெண்களின் இயல்பு

தம் செயல்களைக் கணவன்மார்கள் பாராட்டவேண்டுமென்றே பெண்கள் விரும்புவார்கள். அவர்கள் மெய் வருந்திச் செய்திருக்கும் செயல்களைப் பழித்தால்-வெறுத்தால் வேதனையடைவார்கள்; புகழ்ந்தால்தான்-பாராட்டினால்தான் அவர்கள் மனம் சாந்தியடையும். இது பெண்களின் இயற்கை.

தன் சமையலைக் கணவன் பாராட்டினால் அதற்காக மகிழ்ச்சியடையாத மனைவியேயி்ல்லை; குற்றங் கூறினால் கோபங்கொள்ளாத மனைவியும் இல்லை. இந்த இயற்கையை இன்றும் குடும்பங்களிலே காணலாம். இவ்வியற்கையை ஒரு குறுந்தொகைப் பாட்டு தெரிவிக்கின்றது.

‘‘ஒரு பெண் புளித்த தயிரைத் தன் காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களால் பிசைந்தாள். அப்போது அவள் உடுத்தியிருந்த துவைத்த ஆடை அவிழ்ந்துவிட்டது. தன் கையைக் கழுவாமலே அந்த ஆடையை உடுத்திக் கொண்டாள்.