பக்கம் எண் :

திருமுருகாற்றுப்படை41

செற்றம் நீக்கிய மனத்தினர்; யாவதும்
கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத்
தாம்வரம் பாகிய தலைமையர்; காமமொடு
கடுஞ்சினம் கடிந்த காட்சியர்; இடும்பை
யாவதும் அறியா இயல்பினர்; மேவரத்
துனியில் காட்சி முனிவர்"

(126-137)

இவ்வடிகள் முனிவர்களை நம் முன்னே நிறுத்திக் காட்டுகின்றன.

அந்தணரும் வேள்வியும்

கடைச்சங்க காலத்திற்குப் பன்னூறாண்டுகளுக்கு முன்னரே தமிழ் நாட்டில் அந்தணர்கள் பலர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் வேதம் கற்றவர்கள்; வேள்விகளும் செய்தனர். வடமொழி வேதக் கொள்கைகள் தமிழ் நாட்டிலே பரவியிருந்தன. வடவர் - தமிழர் என்ற வேறுபாடு காணப்படவில்லை. தமிழர் நாகரிகம் - வடவர் நாகரிகம் என்ற வேற்றுமையின்றி இரண்டும் ஒன்றாகக் கலந்துவிட்டன.

"ஒருமுகம், மந்திரத்தையுடைய வேதத்தில் விளம்பும் முறை தவறாதபடி அந்தணர்கள் செய்யும் வேள்வியை நினைத்துக் கொண்டிருக்கும்.

ஒருமுகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வி ஓர்க்கும் மே"             (94--96)

இதனால், தமிழ்நாட்டிலே அந்தணர்கள் வேத முறைப்படி வேள்விகளைச் செய்து வந்தனர் என்பதைக் காணலாம்.