கிடைக்கும்". இவைகள் எல்லாம் உழவர்கள்-அதாவது சொந்த நிலமுள்ள வேளாளர்கள் வீட்டிலே கிடைக்கும் உணவுப் பண்டங்கள். தண்டலை உழவர் தனிமனைச் சேப்பின், தாழ்கோட் பலவின் சூழ்சுளைப் பெரும்பழம், வீழ்இல்தாழைக் குழவித்தீம் நீர்க் கவைமுலை இரும்பிடிக் கவுண்மருப் பேய்க்கும் குலைமுதிர் வாழைக்கூனி வெண்பழம் திரள்அரைப் பெண்ணை நுங்கொடு, பிறவும் தீம்பல்தாரம் முனையிற் சேம்பின் முளைப்புறம் முதிர் கிழங்கு ஆர்குவிர் (355--362) இதனால் வேளாளர்களின் வாழ்க்கை நிலையையும், அவர்கள் சைவர்களாக வாழ்ந்தனர் என்பதையும் காணலாம். இவர்கள் உழுவித்துண்ணும் வேளாளர்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் நிலமற்ற உழவர்கள் இருந்தனர். நிலமுள்ள உழவர்கள் இருந்தனர். நிலமற்ற உழவர்கள் தாழ்ந்த வகுப்பினராகக் கருதப்பட்டனர். நிலமுள்ள உழவர்கள் வேளாளர் என்னும் உயர்ந்த வகுப்பினராகக் கருதப்பட்டனர். இவ்விருவகுப்பினரும் ஒழுக்கத்திலும், நாகரிகத்திலும் பழக்க வழக்கங்களிலும் மாறுபட்டிருந்தனர். உழவரைப் பற்றியும் வேளாளரைப் பற்றியும் இந்நூலாசிரியர் தனித்தனியே கூறியிருப்பதைக் கொண்டு இவ்வுண்மையை உணரலாம். மாளிகைகளும் இல்லங்களும் இக்காலத்தைப் போலவே அக்காலத்திலும் நகரங்களிலே உயர்ந்த மாளிகைகள் இருந்தன. அவைகளிலே செல்வமுள்ளவர்கள் வாழ்ந்து வந்தனர். ஏழைகள் சிற்றூர்களிலே |