| 92 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |  
 
 பருவ வானத்துப் பாமழை கடுப்பக் கரு வை வேய்ந்த கவின்குடிச் சீறூர்           (190--191) இவ்வாறு காணப்படுவன உழவர்களின் சிறு குடிசைகள்.  "மூங்கிலைப்பரப்பி, அதன் மேல் வெண்மையான கிளைகளை வைத்து, தாழை நாரால் கட்டப்பட்டு, மேலே தருப்பைப் புல்லால் வேயப்பட்டிருக்கின்றன. அவைகள் தாழ்மையான சிறிய குடிசைகள், அக்குடிசைகளின் முற்றங்களிலே மீன் பிடிக்கும் பறிகள் இருக்கின்றன.  வேழம் நிரைத்து, வெண்கோடு விரைஇத், தாழை முடித்துத், தருப்பை வேய்ந்த குறியிறைக் குரம்பை; பறியுடை முன்றில்        (263--265) இவ்வாறு வலைஞர்களின் குடிசையைக் காட்டுகிறார்.  இவைகளால் அக்காலத்துத் தமிழகத்து மக்களின் நிலையை அறியலாம். தமிழ் மக்கள், செல்வர், வறியர், நடுத்தரமானவர்கள் என்று மூன்று பிரிவினராக இருந்தனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மக்கள் சமுதாயத்தில் இந்த முப்பிரிவுகள் தோன்றிவிட்டன.  வெஃகாவும் காஞ்சியும் காஞ்சிமாநகர் மிகப்பழமையான நகரம். பல மதங்கள் வாழ்ந்த இடம்; பல அறிஞர்கள் சேர்ந்திருந்து பல அரும்பொருள்பற்றி ஆராய்ச்சி செய்த இடம். மதத் தலைவர்கள் பலர் வாழ்ந்த இடம், சைவம், வைணவம், புத்தம், சமணம் போன்ற மதங்களின் உறைவிடம். இம்மதக் கோயில்களும், மடங்களும் அந்நகரிலே இருந்தன. ஒரு காலத்திலே காஞ்சி மாநகரம் தென்னாட்டின்-தமிழ்நாட்டின்-பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தது.   |