வேம்பு : | இப்படி உன்போல் எல்லாப் பார்ப்பனருமே செய்து கொண்டிருந்தால் நெய்வேலித் திட்டமே நிறைவேறாமல் போய்விடுமே. |
| |
கிட்டு : | நிறைவேறிற்று, நிறைவேறவில்லை என்று எடுத்துச் சொல்பவன் பார்ப்பான் தானே. |
| |
வேம்பு : | இப்படியே போய்க்கொண்டிருந்தால் நேரத்தில் நிலக்கரி ஏற்றக் கப்பல் வந்தால் எதை ஏற்றுவது? |
| |
கிட்டு : | நிலக்கரி ஏற்றப்பட்டது கப்பல் சும்மா திரும்பிற்று என்று எடுத்துச் சொல்வோன் பார்ப்பான் தானே! |
| |
வேம்பு : | அதிருக்கட்டும்! நெய்வேலித் திட்டத்திற்கு போட்ட பணமெல்லாம் விழலுக்கிறைத்த நீர் என்று ஆகிவிடலாமா? |
| |
கிட்டு : | போட்ட பணம் வீணாயிற்று, வீணாகவில்லை என்று எழுதிவைப்பவன் பாப்பான் தானே! |
| |
வேம்பு : | பார்ப்பனரைக் கொண்டு நடைபெறுகின்ற எதுவும் பாழாய்ப்தமிழர்களைக் கொண்டு நடைபெறுகின்ற எதுவும் நல்லபடி முடியும் என்ற பெயரல்லவா வந்துவிடும். |
| |
கிட்டு : | பார்ப்பானால் முடிகிறதா, தமிழனால் முடிகிறதா என்று ஆராய்வோன் பார்ப்பான் தானே. |
| |
வேம்பு : | வேலை நேரத்தில் இங்கு வந்த உனக்கு உயிருக்குத் தீங்கு வந்து ஏதாவது நேர்ந்து விட்டால் உன் நேர்த்தலைவன்அல்லவா பதில் சொல்லியாக வேண்டும். |
| |
கிட்டு : | நான் செத்தேன், சாகாமல் இருக்கிறேன் என்று சொல்பவன் பார்ப்பான் தானே! |
| |
வேம்பு : | பார்ப்பனரால் நாடு அழிந்து போகிறது என்ற பழி உண்டாகலாமா? |
| |
கிட்டு : | பார்ப்பானால்தான் அழிகின்றது. தமிழனால்தான் நாடு அழிகின்றது என்று உலகத்திற்கு காட்டுகின்றவன் பார்ப்பான்தானே! |