முத்து : | வெட்டுவதை மறிக்க உம் ஒருவரால் முடியுமா? | | | கணக் : | முடியும். | | | முத்து : | உம்முடன் யார் சேருவார்? | | | கணக் : | எல்லோரும் | | | முத்து : | நீர் சட்டாம்பிள்ளையோ! | | | கணக் : | தன்னலம் மறுத்தவன் | | | முத்து : | கணக்காயரே! ஊருக்கு இடையூரான ஆலமரத்தை வெட்டுவதில் நீர் ஒத்துழைக்க வேண்டும். | | | கணக் : | குழவிக்கல் கோயில் அன்று ஊருக்கு இடையூறு | | | முத்து : | கணக்காயரே! ஊருக்கு இடையூரான ஆலமரத்தை வெட்டுவதில் நீர் ஒத்துழைக்க வேண்டும். | | | கணக் : | குழவிக்கல் கோயில் அன்று ஊருக்கு இடையூறு | | | முத்து : | பின்.... | | | கணக் : | குழவிக்கல் கோயில் |
இதோ வருகின்றேன் என்று முத்து எரிச்சலோடு போனான். முத்து நடந்ததை வேங்கையிடம் கூறினான். சிவன் கோயிலைத்தான் இடிக்க வேண்டும். ஆலமரக்கோயிலை வெட்டக்கூடாது; ஆலமரத்தடியில் வந்து சேர்ந்த ஊர்மக்களிடம் கூறினான். ஊர் மக்கள், நாங்கள் எல்லோரும் வேங்கையின் கட்டளைப்படி வந்துள்ளோம். கணக்காயர் வர மறுத்தார். இது அவர் செய்த முதல் தப்பு. இரண்டாவது சிவன் கோயிலைப் பழித்தார் என்று கூச்சலிட்டார்கள். வேங்கையும், சட்டாம்பிள்ளை புலிக்குட்டியும் தனித்துப் பேசினார்கள். முடிவில் கணக்காயரை நோக்கிச் சட்டாம்பிள்ளையும் முத்துவும் போவதாகத் தெரிந்தது. |