பக்கம் எண் :

116ஏழைகள்

‘நான் கொற்றவேல் மன்னன் புதல்வி. என் பெயர் செல்வி’ என்று கூறினான். அவள் கொஞ்சம் நாணத்தால் உடை ஒதுங்கித் தலை குனிந்திருந்தாளாயினும், அந்தக் கட்டழகனின் நல்ல பதிலை எதிர்பார்த்தாளாதலால் சற்று நிமிர்ந்து புன்சிரிப்புடன் அவனுடைய முகத்தை மற்றொரு முறை பார்த்தாள். அவனும் அவள் முகத்திற் சிந்தும் அழ கைத் தன் பார்வையால் ஏந்தினான்.

அவள் வாடையுயர்ந்த மங்கை! மிதமிஞ்சிய பருமனில்லாத மின்னற்சுரம் போன்ற மேனியுடையவள். மெல்லிய கருங்குழலின் பின்னல், பின்னால் நீண்டு தொங்கிற்று கருநாகம் போல்! நிலவுபோல் வெண்ணிறத்தையும், நிழல்போல் மேன்மையையும் உடைய அவளது ஆடையானது மேனியின் ஒளியை மறைத்துவிட முடியவில்லை. பிறை போன்ற நெற்றி, கருவிழி, செவ்விதழ், முல்லைப்பல் ஆகிய இவைகள் வேண்டுமென்று சிரிப்பதன்றி இயற்கையாக நகைப்பைக் கொட்டிக் கொண்டிருந்தன.

அந்த அழகின் சித்திரம், அவனது நெஞ்சை அளாவி, உயிரில் தோய்ந்தது. ஆயினும் அவள், பகை அரசனின் மகள் என்பதை எண்ணினான். தன் நெஞ்சையும் உயிரையும் அளாவிய அந்த அழகை வலிய வெளியே இழுத்துப் போட்டான்.

‘என்னை நீங்கள் ஒப்புகிறீர்களா?’ என்று அவள் ஆற்ற முடியாத காதல் தூண்டக் கேட்டாள்.

‘செல்வியே, ஒன்றை ஒன்று தழுவும் நமது இரண்டு உள்ளத்தை, நம்மிரு நாட்டின் பழம்பகையானது பிரிக்கிறது. என் அன்னை நாட்டில் ஒருத்தியிருக்கிறாள். அவள் உன்னிலும் அழகுடையவள் அல்ல எனினும் அவள் என் பகையரசனின் மகளல்ல’ என்று கூறி மறுத்தான்.