பக்கம் எண் :

 15

1952- 

‘வளையாபதி’ திரைப்படம் கதை, உரையாடல், பாட்டு. இசையமுது இரண்டாம் தொகுதி வெளியிடல்.

  

1954- 

பொங்கல் வாழ்த்துக் குவியல்; கவிஞர் பேசுகிறார் சொற்பொழிவு நூல் வெளிவரல், குளித்தலையில் ஆட்சிமொழிக் குழுவிற்குத் தலைமை ஏற்றல்.

  

1954- 

7-2-1954 மூன்றாம் மகள் ரமணி - சிவசுப்ரமணியம் திருமணம் இராசாக்கண்ணனார் தலைமையில் நடந்தது.

  

1955-  

புதுவைச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியுற்று அவைத் தலைமை ஏற்றல். சூன் 26-ல் மன்னர் மன்னன் - மைசூர் வீ. சாவித்திரி திருமணம். கோவை. அ. அய்யாமுத்து தலைமை. பாரதிதாசன் கதைகள், பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதி வெளியிடல்.

  

1956- 

தேனருவி - இசைப்பாடல்கள் வெளியிடல்.

  

1958- 

தாயின்மேல் ஆணை : இளைஞர் இலக்கியம் வெளியிடல். தமிழகப் புலவர் குழுவின் சிறப்புறுப்பினராதல். ‘குயில்’ கிழமை ஏடாக வெளிவருதல்.

  

1959- 

பாரதிதாசன் நாடகங்கள் : குறிஞ்சித் திட்டு காவியம் வெளியிடல்; பிசிராந்தையார் முத்தமிழ் நாடகம் தொடர்தல்; 1-11-59 முதல் திருக்குறளுக்கு வள்ளுவர் உள்ளம் என்ற உரை விளக்கம் எழுதுதல்.

  

1961- 

சென்னைக்குக் குடிபெயர்தல். பாண்டியன் பரிசு - திரைப்படம் எடுக்கத் திட்டமிடல். செக் நாட்டு அறிஞர் பேரா. கமில்சுலபில் செக் மொழியில் பெயர்த்த பாவேந்தரின் பாடல்களைக் கொண்ட நூலைப் பெறுதல். ஜஸ்டிஸ். எஸ். மகராசன் நட்புறவு.

  

1962- 

சென்னையில் மீண்டும் ‘குயில்’ கிழமை ஏடு. (15-4-62) அனைத்துலகக் கவிஞர் மன்றத் தோற்றம், கண்ணகி புரட்சிக் காப்பியம், மணிமேகலை வெண்பா. வெளியிடல். தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் இராசாசி பொன்னாடை அணிவித்துக் கேடயம் வழங்கல்.