பக்கம் எண் :

40ஏழைகள்

மெத்தை வீட்டு ஆச்சி என்னும் பெரிய மனுஷி :

அரிசியை எடுத்து வரச் சொல்லுகின்றேன் : நான் ஒரு கேள்வி.

  

மொட்டை :

கேள்!

இதைக் கேட்டுச் சில பெரிய மனுஷிகள் நகைத்தார்கள். அதனால் மொட்டையின் தாய், அட அவள்மேல் சாமியும் வரவில்லை கீமியும் வரவில்லை! என்றாள். இந்த வார்த்தை ஆவேசம் கொண்ட மொட்டைக்குப் பிடிக்கவில்லை. தன் தாயை நோக்கி, உனக்குத்தான் தெரியுமோ? போ! போ? என்றாள். இதற்கிடையில் கிழவி மொட்டையை, புரட்டாசி மாதத்தில் கல்யாணம் நடப்பதுண்டா? சாமி இப்படித்தானா சொல்லும்? என்றாள்.

மொட்டை :

ஆமாம். உன் மகள் பொன்னம்மா மாத்திரம் சரியாய் சொல்லி விடுவாளோ? நீ வீட்டில் மறைத்த அரிசி அவளுக்குத் தெரிந்ததால் சொன்னாள்! நான் அப்படியில்லை! என்றாள்.

  

இதற்குள் தங்கமாச்சாமி :

‘என்னைக் கேளுங்கள்! சண்டை போட்டுக் கொள்ளாதீர்கள்! ’ என்றது.

  

கிழவி :

இரு சாமி! அந்த மொட்டைச்சாமிக்குத் திருப் பழம் கொடுத்து, மலையேற்றிவிட்டு வருகிறேன்! என்று சொல்லி, அங்கிருந்த பெரியதொரு கற்பூரக் கட்டியைக் கொளுத்திக், ‘கையை நீட்டு மொட்டை! ’ என்றாள்.

  

மொட்டைச்சாமி :

அதெல்லாம் முடியாது. நீ கொடுப்பதாவது நான் வாங்குவதாவது! போடி! என்றது.