பக்கம் எண் :

76ஏழைகள்

இன்னொருவர்-அடிக்கடி இவர்கள் நம்மிடம் வந்து தேவன் என்கிறார்கள்-மோக்ஷம் என்கிறார்கள் ஒன்றும் புரிய வில்லை.

வேறொருவன்-அவர்கட்கு விளங்குவதால்தான் நமக்கும் அவ்வளவு விளக்கமாய்த் தெரிவிக்கிறார்கள்.

இன்னும் ஒருவன்-அவர்கள் சொல்லுகிறபடி நாம் கேட்டால் நாம் செய்யும் பாபங்களைக் கடவுள் தீர்த்து விடுவாராம்.

இனியொருவன்-சும்மா இருக்கும் நம்மிடம் இதைச் சொல்ல வருவதன் நோக்கம் என்ன? பாபம் செய்யுச் சொல்லுகிறார்கள்

வேறு ஒருவன்-எந்தத் தேவனாவது எல்லாரும் உழைக்க வேண்டும்-சாப்பிட வேண்டும் என்று பாடுபடுகிறானா என்று அந்த வேதம் போதிப்பவனைக் கேட்க வேண்டும்.

இன்னொருவன்-மனிதர்க்காகத் தேவன் பாடுபடுகிற வரைக்கும் மனிதன் தொல்லை தீரப் போவதில்லை. ஏழையுழவர் உழத்தியரின் பசிகொண்ட உள்ளத்தில் உதித்த இந்த மாணிக் கங்கள் அவர்களின் வாயினின்று வெளிப்பட்டன. பயன் என்ன? அவை அந்தச் சேற்று நிலத்திலேயே இறைந்தன. அவர்கள் குடிசை யடைந்தனர்.

சைவம் என்றும், வைஷ்ணவம் என்றும், கிறிஸ்தவம் என்றும் பலபல மதங்களைக் கட்டி, பழுதுகொண்டிருக்கும் போதகர்களே! ஏழை யுலகின் பசியுள்ளம் என்ன? சொல்லுகிறதென்பதை நீங்கள் கவனித்ததுண்டா?