பக்கம் எண் :

சிரிக்கிறார்கள்95

18
பெறத்தக்க ஒன்று பெற்றுவிட்டேன்
அவளும் நானும்


என் உள்ளம் ஒரு துள்ளுமான்! என் அறிவு தடுத்தும் கேளாமல் உங்களை அணுகிற்று, உறவு வேண்டி!

‘எள்ளத்தனை இடமும்... ’

‘இல்லாதிருக்கலாம்; உண்டாக்க முடியாதா?’

‘இரும்பினால் ஆனவை கதவுகள்’

‘எவிரும்பினால் திறக்க மாட்டாவா தாழ்’

‘விருந்தினரை வெறுப்பதில்லை நாங்கள்’

‘வியப்பில்லை-அது தமிழர் பண்பாடு! என்பாடு வேறு! தீ வெதுப்பத் தாவித் திருக்குளத்தின் இடைப்புறத்தில் சிறிது இடம்....

‘கொடுத்தாலும் மாசுபடும். ’

‘ஊருணி நீர் நிறைந்திருப்பது உண்ணாதிருக்கவா? அல்லிக்குளம் அழகு பெற்றிருப்பது ஆடாதிருக்கவா? ஆழ்நீர் மடு மூழ்காதிருக்கவா? ஏடி! ஏடி! ஏடி! தோழி, அதோ