27 அயோக்கியத்தனம்
தமிழரசு (16-7-31) 21-ம் பக்கத்தில் அய்யாமுத்து, பண்ணைக்காரர்களின் படுமோசம் என்ற தலையங்கமிட்டு எழுதியுள்ள வியாசத்தில் “இராணுவத்துக்குச் செலவாக்கும் பகுதிப் பணத்தை விவசாயத்துக்கு ஒதுக்கி, பல்லாயிரம் ஆட்களைச் சேர்த்து நூதன இயந்திரங்களையும் ஒன்று திரட்டி, நவீனமுறையில் கூட்டுறவு வழியில் விவசாய பண்ணைகள் ஏற்படுத்தினால் இந்நாட்டின் வறுமை நிலையும் வேலையில்லாத் திண்டாட்டமும் எவ்வளவோ மாறிவிடும்” எனத் திருவருள் சுரக்கின்றார். ராமசாமிப் பெரியார் கதர் திட்டத்தைத் தாக்கினார் என, இதே அய்யாமுத்து எதிர்த்து எழுதுகையில் ராமசாமிப் பெரியார் நமக்குரிய எல்லாவற்றையும் இயந்திரங்களைக் கொண்டே தயாரித்துக் கொள்ளட்டும் என்று வெகு நீளமாகக் கேலி பேசினார். இப்போது பழய விவசாயக் கருவிகளை நீக்கி நூதன யந்திரங்களைப் பெருக்கும்படி சர்க்காருக்கு விண்ணப்பம் தயாரிக்கிறார். இராமசாமிப் பெரியாரைக் கேலி செய்தது அயோக்கியத்தனமா? இவ்வுரைகள் அயோக்கியத்தனமா என்பதுதான் கேள்வி. புதிதாக மகாத்மாவை அறிந்த மகா-௱-௱-ஸ்ரீ அய்யாமுத்து மகாத்மாவுக்கு அப்பாலுள்ள சர்க்காருக்கு விண்ணப்பம் போடுவது ஒருவித வேடிக்கை. சிலசமயம் இவர் தமிழரசின் சார்பாக நின்று தமிழரசு காட்டும் நன்றியின் பிரதியுதவியாக ஸ்தாபிக்க இருக்கும் தொழி |