பக்கம் எண் :

122

30
கதரா? தூக்குக் கயிறா?


(கிண்டற்காரன்)

காங்கிரஸ் பிரசங்கி சொல்லுகிறார்:- இந்திய மக்களான உங்கள் பேரால் அளவற்ற கோடி ரூபாய்கள் கடன் வாங்கப்படுகிறது. வரிவகையிலோ நீங்கள் மிகத் தொல்லை அடைந்து வருகிறீர்கள். நீங்களோ எல்லா விஷயத்திற்கும் அந்நிய நாட்டான் கையையே எதிர்பார்க்கும் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறீர்கள். அமெரிக்கர் இங்கிலாந்துக்காரர் முதலியவர்களின் நாள் வரும்படி 2 ரூபாயாக இருக்க, நீங்கள் சராசரி நாள் ஒன்றுக்கு 2 அணா அடைகிறீர்கள். இவை முதலிய ஆயிரங் கோடிக் காரணங்களால் நமக்குச் சுயராஜ்யம் அவசியமாகும். சுயராஜ்யம் வந்து விட்டால்! வந்து விட்டால் என்பதென்ன? இதோ வந்துவிடப் போகிறது. அதன்பின், அதாவது உடனே நீங்கள் மிகச் சந்தோஷ வாழ்க்கை நடத்த முடியும். அதாவது ராமராஜ்யத்தில் மக்கள் எவ்வளவு அனுபவித்தார்களோ அதுபோல நீங்கள் சுகமாக இருப்பீர்கள். காங்கிரஸ் திட்டத்தை நீங்கள் நிறைவேற்றி வைக்க வேண்டும். நீங்கள் கதர்நூல் நூற்க வேண்டும். கதர் உடை உடுத்தவேண்டும்.

ஷெ காங்கிரஸ் பிரசங்கம் கேட்ட ஏழை மக்கள்நினைக்கிறார்கள் :-

நன்றாய்த் தெரிகிறது. காந்தி நமக்காகத்தான் மிக்க பாடுபடுகிறார். எப்படியாவது சுயராஜ்யம் வாங்கிக் கொடுப்பார். அடடா என்ன சந்தோஷமாகக் காலம் கழிக்கலாம்.