பக்கம் எண் :

158

இதென்னையா, பெரிய நூதனமாக இருக்கிறது! பிறகு திடீரென்று இவரைக் கோயிலில் பார்த்தேன்! அப்போது இவர் சாமியாராகிவிட்டார்! பாபத்தைப் போக்குகிறவர் ஆகிவிட்டார்! மோக்ஷத்திற்கு மக்களை அனுப்புபவராகிவிட்டார்! தேவத்திரவியத்தைச் சட்டைச் சாக்கில் வைத்திருப்பவராகிவிட்டார்! கடவுளின் பிரதிநிதி யாகிவிட்டார்! குஞ்சுகளையெல்லாம் கோழியானது தனது இறைக்குள் வைத்துக் காப்பதுபோல் மக்களையெல்லாம் நலம் அடையும்படி கண்ணுங்கருத்துமாய்க் காப்பாற்றுபவராகி விட்டார்! மனிதன் செத்துப்போன பின் அவர்களை இங்கிருந்தபடி நல்ல லோகத்தில் போய்ச் சேரும்படி விசையை முடுக்கிவிடுகிறவராகி விட்டார்!

இதென்னையா! என்னைப் போலிருந்தவர் திடீரென்று சாமியாகி மனிதர் செய்ய முடியாத வேலைகள் எல்லாம் செய்கிறாரே என்று நினைத்து அவருக்கு எதிரிற் போய் நின்று ச்லீட் மிஸ்டர் என்றால் நீ ஓர் அஞ்ஞானியா என்கிறார்! பின்னென்ன சொல்வது என்று கேட்டால் தமிழில் சாமி என்றும் இங்கிலீஷில் பாதர் என்றும் பிரஞ்சில் “பேர்” என்றும் சொல்லச் சொல்கிறார். சாமி! ஏன் பாடுபட்டுப் பணம் சேர்க்கிறீர்கள் என்றால் உங்களை நல்வழிப்படுத்த என்கிறார். கோவிலுக்கு எதிரில் பந்தி பந்தியாக உட்கார்ந்து வருவார் போவாரை முகம் தூக்கிக் கெஞ்சும் ஏழைகட்குப் பணம் கொடுத்துக் காப்பாற்றலாகாதா என்றால் அவர்கள் சம்பாதித்துக் கொள்ளட்டும் என்கிறார். நாட்டில் ஏழ்மையும் நோயும் அதிகரிக்கிறதே என்றால் நானென்ன செய்கிறது என்கிறார்! பணக்காரர் சிலர் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் வீட்டில் இறந்துபோனால் பிணத்தை மந்திரிக்க 100 ரூபாய் முள்ளங்கிப் பத்தைபோல் வந்துவிடும் என்கிறார். படித்த பிள்ளைகள் வேலையில்லாமல் கஷ்டப்படுகிறார்களே - உங்கள் தெய்வ வல்லமையால் வேலை ஏற்பாடு செய்து கொடுக்கலாகாதா என்றால் முடியாது என்கிறார். நம்மை அறிந்த பிள்ளைகள் பெரிய பெரிய