பக்கம் எண் :

161

39
“ஙங்ஙஃ”


(கிறுக்கன்)

“ஙங்கலந்தன ஙேதிஙேவலல்
ஙங் கலந்தன ஙாஙிஙாவரம்
ஙுங்கலந்தன ஙூஙௌஙோரிது
ஙெங் கலந்தன ஙேரிஙீத்தலே”

அன்பார்ந்த சகோதரி, சகோதர்களே! ஆச்சரியப் படாதீர்கள்! அல்லது சிரிக்காதீர்கள்! அல்லது குழப்பமடையாதீர்கள்! மேலே காட்டப்பட்டுள்ளது உங்களுக்குத் தெரியாமலிருந்தால், அதற்கு நீங்களே காரணமாவீர்கள். ஏன் அதையெல்லாம் பாடசாலையில் படிக்காமல் இருந்தீர்கள்? “ஆசிரியர் சொல்லிக் கொடுக்காமலிருந்தால் எங்களுக்குத் தெரியவில்லை என்றால், ஆசிரியரிடம் தொந்தரவு செய்து ஏன் கேட்டுத் தெரியாமலிருந்தீர்கள்? பாவம். உங்களுடைய பரிதாபகரமான தற்போதைய நிலைக்கு நான் இரங்குகிறேன்.

நான் கூறினாலன்றி இத்தக்கு குசுகுசுவினாலும் அதைத் தெரிந்து கொள்ளப் போவதில்லை. இப்போது கவனித்துப் பாருங்கள்! கிறுக்கனுக்கு நிகரானவரோ, சமமானவரோ இந்த உலகத்தில் ஒருவருமில்லையல்லவா? ஹா!! ஹா!! ஹா!!! மேலே கூறப்பட்டுள்ளதை இன்னது என்பதை எவர் அறிவித்தாலும் சரி, அவருக்கு ஆயிரம் கோடி பரிசளிக்கத் தயார்.