43 சேசுநாதர் வருகை
வெகுநேரமாக வேலை நடந்து கொண்டிருந்த போதிலும், விஷயம் பிறகு புரிந்தது. உடம்பில் விளையாடிய மூட்டைப் பூச்சிகள் காதில் காலடி வைக்காமலே இருந்திருந்தால் நான் தூங்கியபடி இருப்பேன். மூட்டை கடித்தபடி இருக்கலாம். நான் விழித்துக் கொள்ளும்போது இரவு 2 மணி இருக்கும். அதன் பிறகு தூக்கத்தை அழைத்துப் பார்த்தேன். வரவேயில்லை. விளக்கைப் பெரிது படுத்தினேன். அதன்பின் நான் அழைக்காமலேயே தலைமாட்டில் இருந்த சிகரெட் வாயிற் புகைந்தது. தலைமாட்டில் பின்னும் தடவினேன். ஒரு தினசரிப் பத்திரிகை கிடைத்தது. நான் மல்லாந்து படுத்தபடி பத்தரிகைகளை புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். மேற்படி சிகரெட் என் உதடுகளின் இடையில் புகைந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் என் கண்களில் தோன்றிய விஷயம் கீழ்வருமாறு:- ஜெர்மன் தலைவர் தேர்தல்:- “.... ரைன்லாண்டில் உள்ள கத்தோலிக்கர் அனைவரும் கத்தோலிக்கரான ஹிட்லரை ஆதரிக்காமல் ப்ராட்டஸ்டண்டான ஹிண்டன்பர்க்கு வெற்றியடையப் பிரார்த்தனை செய்தார்கள்.” இந்த வரிகளின் அர்த்தத்தை என் உள்ளம் விழுங்கியவுடன் இருட்டும் வெளிச்சமும் இல்லாத வழியாக |