பக்கம் எண் :

201

46
தமிழர்கள் நசுக்கப்பட வேண்டும்!


தமிழருக்குப் புரட்சி மனப்பான்மை அவர்கள் தங்கள் பகைவரால் நசுக்கப்படுவதிலிருந்து உண்டாகும். ஆகையால் தமிழர் தம் பகைவரால் அடையும் எவ்விதத் தொல்லையையும் நான் வரவேற்கின்றேன்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே தமிழர் சீரழிந்து வருகின்றனர். அவர்களின் சீரழிவுக்குக் காரணம் இன்னதுதான் என்று அறிந்து வந்தும், அவர்களின் மித மிஞ்சிய ஆஸ்திகப் புத்தியானது அந்தச் சீரழிவும் நல்லதே என்று திருப்தியடைய வைத்தது.

அளவு கடந்த கடவுள் வழிபாடு, அதிலிருந்து அதே வீதத்தில் அரச வழிபாடு, அதிலிருந்து எடுத்ததற்கெல்லாம் பயம், பின்னர் சுயநலம் - இந்த நோயில் ஆதியிலிருந்தே தமிழர்களை அழுத்தி வந்தனர் தமிழர்களின் எதிரிகள். ஆதி முதல் தமிழர்க்கு எதிர்த்துப் போராடும் சக்தி உண்டாக அவர்கள் நெஞ்சுக்கு ஒரு நிமிஷ நேரமும், விடுதலை இருந்தததில்லை. வஞ்சத்தால் செல்வாக்கடைந்த மூளை, திரைமறைவில் வேலை செய்யும். அதன் விளைவாக பகிரங்க எதேச்சாதிகாரம், தூக்குமரம், சித்ரவதைகள் இவைகளைக் கண்டபின்னும் அரச வணக்கம்! வறுமையிற் செம்மை - இந்த நம்பிக்கை! அவனன்றி ஓரணுவும் அசையாது என்ற ஐயம்! நெஞ்சு பஞ்சு படும்பாடு! நரம்புகள் துடைப்பக் குச்சி.