பக்கம் எண் :

239

59
ஏழ்மை ஒழியுமா?


மணச்சநல்லூர்க் கழக உயர்நிலைப்பள்ளி மாணவர் மன்றத்தில் பேசிய குன்றக்குடி அடிகளார்,

‘பேய்கள் தங்க வேண்டும் என்பதற்காக இருள் இருக்க வேண்டும் என்று நினைப்பதுபோல் பணக்காரர்கள் தருமம் செய்ய வேண்டும் என்பதற்காக ஏழைகள் இருக்கவேண்டும் என்று ஒரு சிலர் சொல்லுகிறார்கள்’ என்று கூறினார்.

இவ்வாறு அடிகள் கூறியதை விடுதலை ஆசிரியர், ‘ இது ஆச்சாரியார் தொடங்கியுள்ள சுதந்திராக் கட்சியை மறைமுகமாகத் தாக்குவது என்று சுட்டிக் காட்டினார். எனவே ஏழைகள் என்றும் பணக்காரர்கள் என்றும் இரு பிரிவு இருக்க வேண்டும் என்று ஆச்சாரியார் சொன்னார் என்றும், அப்படி இருக்கக் கூடாது என்று குன்றக்குடியார் சொன்னார் என்றும்,

‘குன்றக்குடியார் கருத்தே சரியானது’ என்று விடுதலை ஆசிரியர் கூறினார் என்றும் நாம் கொள்ளுவதில் பிழை ஒன்றும் ஏற்பட்டுவிடாது. அவ்வாறு வைத்தே மேலே நம் ஆராய்ச்சியை நடத்துகின்றோம்.

தருமம் செய்ய வேண்டும் என்பதற்காகவே ஏழைகள் இருக்க வேண்டும் என்று ஆச்சாரியாரோ, அவர் கட்சிக்காரரோ சொல்லியிருப்பார்கள் என்று நாம் எண்ணவில்லை. பணக்காரர் பணக்காரராகவே இருக்கவேண்டும் என்றுதான் ஆச்சாரியார் சொல்லி வருகின்றார். தருமம்