பக்கம் எண் :

251

61
பொன்னும் தங்கமும்

பொன்:-


பொல்லல் - பொலிதல், அழகடைதல், இதன் வேர்ச்சொல் பொல் என்பது. இது எதிர்மறை. ஆ பெற்று பொல்லா என்று எதிர்மறைப் பெயரெச்சமாகி வரும் பொல்லாச் சிறகு என்பது அழகில்லாத சிறகு எனப்பொருள்படுவது காண்க. இதனால் பொல் என்தபற்குப் பொலிவு, அழகு என்பதே பொருளாம் என்று உணர்க.

பொல் என்பதன் ஈறு திரிந்து பொன் ஆயிற்று. கல்-கன் எனவும் , நல்-நன் எனவும் ஆனாற்போல.

எனவே பொன் காரணப்பெயர், பொலிவு, அழகு என்பன அதன் பொருள்கள்.

பொலன் என்பது பொன்னுக்குப் பெயர். இதுவும் பொல் என்பதன் அடியாய்ப் பிறந்தது காண்க. பொன் என்பது பொலிவுடையது; அழகுடையது என்று சொல்லும் போது அது மாசில்லாதது; ஒளியுடையது என்பனவும் பெறப்படும்.

பொன், ஆடகம், கிளிச்சிறை, சாதரூபம், சாம்பூ நதம் என நால்வகைப்படும் என்று நூல்கள் நுவலும். இவ்வாறு வழக்கில் இல்லை.

சாம்பூநதம் உயர்ந்ததென்று அந்த நூல் அறிவிக்கும். உலகின் நடுவில் சம்பு (நாவல் மரம்) இருப்பதாகவும், அதனால் அது சம்புத்தீவு (நாவலந்தீவு) என பெயர்