62 உருசியாவில் திருக்குறள் விளக்கம்
தமிழ்க்கலை மன்றத்தின் 6வது ஆண்டின் பொதுக் கூட்டம் இன்று (30-8-60) மாலை அரசினர் கலைக் கல்லூரியில் நடைபெற்றது. மன்றத்தின் தலைவரும் முன்னாள் முனைவருமான திரு. வி. சுப்பிரமணியம் அவர்கள் இதற்குத் தலைமை தாங்கினார். தலைவர் வி. சுப்பிரமணியம் தமது முன்னுரையில் தமிழ்க்கலை மன்றத்தின் தொண்டினைப் பாராட்டி, மொழி வளர்ச்சி, மொழியாக்கம், கலை, ஓவியம் ஆகியவற்றைத் தன்னுள் கொண்டதே தமிழ்க்கலை என்று கூறித் தமிழ்க் கலையின் தொன்மைச் சிறப்புக்களை எடுத்துரைத்தார். உலகிலுள்ள பல்வேறு நாடுகளின் நாகரிகம் - பண்பாடுகள் முதலியவை ஒன்றுக்கொன்று மாறுபட்டனவாய் இருக்கும் என்றும் அதனால் அந்தந்த நாட்டின் கலைகளும் பல்வகையாக மாறுபட்டனவாய் இருக்கும் என்றும் கூறினார். அதிகம் கற்றறிந்து அமைதியுடன் இருப்பவர்க்கே கலையில் முதலிடம் அளிக்கப்பட்டு வந்துள்ளதென்றும், “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்”
என்ற உயர்ந்த எண்ணத்துடன் நாம் நுகரும் இன்பத்தை உலக மக்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ளவேண்டும். |