என்ற குறிக்கோள்களுடன் வாழ்வதே தமிழ்க்கலையின் சிறப்பு என்று திரு.வி. சுப்பிரமணியம் கூறினார். இவ்வாறு தமிழ்நாடு என்னும் நாளேடுதான் முதற்பக்கத்தில் தெரிவித்துள்ளது. இன்னும் அது தொடர்ந்து கூறுவது கீழ்வருமாறு:- டாக்டர் சிதம்பரநாதன் அவர்களின் உரை:- மாசுகோவில் நடைபெற்ற கீழைநாட்டு அறிஞர்கள் மாநாட்டில் தாம் கலந்து கொண்டது பற்றியும் அங்குத் தாம் ஆற்றிய சொற்பொழிவுகளைப் பற்றியும் டாக்டர் சிதம்பரநாதன் அவர்கள் எடுத்துக் கூறினார்கள். “உலகினருக்கு திருவள்ளுவர் தரும் செய்தி” என்ற தலைப்பில் மாசுகோவில் நிகழ்த்திய உரை பற்றி சிதம்பரநாதன் அவர்களின் கூற்று:- திருவள்ளுவர் வாழ்வியலில் பல்வேறு குணங்களையும் நன்கு உணர்ந்தவர். செம்மையாக வாழ்வை நடத்தி உயர்நிலை அடைவதற்கு வழிவகைகளைக் கூறும் கருத்துக்கள் பல திருக்குறளில் பொதிந்து கிடக்கின்றன. அன்றாட வாழ்வை இனிமையும் பண்பும் பயனும் உடைய தாக்குவதே திருக்குறளின் உள் உணர்ச்சியாகும். இது அப்பட்டமான வாழ்க்கை நூல் என்பதையும் அம் மாநாட்டில் நான் தெளிவுபடுத்தினேன். அதற்கு அங்கே நல்ல வரவேற்பு காணப்பட்டது. நம் இலக்கியச் சான்றுகள் பற்றியும் எடுத்துக் கூறினேன். ஊழுக்கு மனிதன் அடிமையாகலாம்; ஊழை மனிதன் அடிமையாக்க முடியும் என்ற கருத்தை நான் விளக்கியபோது உருசியர்களும்; பிற அறிஞர்களும் குறளை வரவேற்றனர். இனி நாம் டாக்டர் சிதம்பரநாதன் அவர்கள் தமிழ்த் தொண்டு பற்றி எழுதுகிறோம். டாக்டர் சிதம்பரநாதன் அவர்கள் உருசியாவில் பேசிய பேச்சுக்கள் முழுவதையும் தமிழ்நாடு நாளிதழின் மூலம் |