3 கடவுளைத் திட்டவில்லை; கடவுள்பேரால் நடக்கும் ஆபாசங்களையே வெறுக்கின்றோம்
‘பார்ப்பனர் உயர்ந்தவர்கள்’ - இந்தக் கடிவாயிலிருந்துதான் இந்திய சமூகம் முழுதும் விஷம் பரவிற்று. அதன் பயனாகத்தான் இன்றைய தவிப்புநிலை யேற்பட்டது. மக்கள் அனைவரும் சமம் என்ற நிலையை உண்டாக்க முயலும்போது பார்ப்பனன் உயர்ந்தவன் என்ற ஆபாசக் கூச்சல் கிளம்பாமலிருக்கட்டும் என்று பார்ப்பனனிடம் சொன்னால் அவன் ஓகோ பார்ப்பனன் உயர்ந்தவன் என்பது கடவுள் கருத்தல்லவா என்று கூறுகிறார். இது கடவுள் கருத்தாக இருக்குமா? இப்படி ஒரு கடவுள் கருதியிருப்பாரா? கருதியிருப்பார் எனில் நாங்கள் அப்படிப்பட்ட கடவுளை வெறுக்கிறோம். இல்லை, இல்லை. பார்ப்பனன் தன் சுயநலத்திற்காகப் புளுகி - அதைக் கடவுளின் தலைமேல் வைத்து விட்டான் என்றால் அந்த நல்ல கடவுளுக்குச் சுயமரியாதைக்காரர் ஆயிரம் நமஸ்காரம் அனுப்புகிறார்கள் தரகர் தக்ஷணை கேட்காதிருந்தால். இந்தியர் வறுமைப் பிணிக்குக் காரணம் என்ன? சொந்த ஆட்சி இல்லை. ஏன்? ஒற்றுமை இழப்பு. ஒற்றுமை ஏற்படுத்த என்ன தடை? பாதம் வைத்த நாமம் தான் உயர்ந்தது என்று இந்த நாட்டாரெல்லாம் ஒப்புக்கொண்டால் ஒத்துப் போகலாம் என்று பாதநாமக்காரன் சொல்லுகிறான். மொட்டை நாமக்காரனுக்கு உலகத் |