பக்கம் எண் :

267

64
செங்கோன் தரைச்செலவு தமிழுக்கு வரலாறு உண்டு


இது ஒரு தமிழ்ப் பெருநூல். இதனைப் பாடியவர், தமிழகத்தில் தலைநாளில் வாழ்ந்த கணியூர்ச் சேந்தன் என்பவர்.

செங்கோன் என்ற மன்னனின் தரைப்படை எழுச்சி என்பது செங்கோன் தரைச்செலவு என்பதன் பொருள்.

பெருவள நாட்டரசனாகிய செங்கோன் சிற்றரசரின் நாட்டை விரும்பிப் போருக்குச் சென்றதைக் கூறுவது என்க!

இந்நூலைக் கொண்டும், இந்நூலின் உரையைக் கொண்டும்,

ஏழ்தெங்கநாடும், பெருவளநாடும் இருந்தவண்ணம் அறியப்படும். பேராறு என்னும் ஓராறு இருந்தது விளங்கும். மணிமலை என்னும் மலையும் முற்றும் மனக்கண்ணுக்குக் காட்சி தருவன. சக்கரக்கோ அசுத்திரன், நெடுந்துறையன், இடைக்கழிச் செங்கோடன் முதலிய பெரும்புலவர் வாழ்ந்தமை புலப்படும். அக்காலத்தில் சிறப்புற்று விளங்கிய நூற்கள் பெருநூல், இயல்நூல், தாப்புலி என்னும் யாப்பு நூல்.

இச்செங்கோன், பஃறுளி ஆறு கடல் கொள்ளப்படுமுன் இருந்தவன்.