துக்கு மொட்டை நாமம் சாத்த யோசனை. அன்பே சிவம். ஆகையால் உலகத்திற்குச் சிவமே கடவுளாக இருக்க முடியும் என்று சைவன் பல்லைக் கடிக்கிறான். அர்த்தம் நாஸ்தி, கிருகம் நாஸ்தி என்று வேதாந்தி துவக்கிவிடுகிறான். கிறிஸ்து வேதமே சத்ய வேதம் என்று கிறிஸ்தவர்கள் மற்றவர்களைக் கூப்பிடுகிறார்கள். மகம்மதியர் மற்றவர்களெல்லாம் காபீர்களாக இருக்கிறார்கள் என்று அவர்களை மீட்க முயலுகிறார்கள். புத்த மதத்தை சார்ந்தவரும் ஒரு பக்கம் கோணிக் கொள்ளுகிறார்கள். இன்னும் எத்தனையோ கூட்டம்! இதில் ஒருவனுக்குள்ள அறிவு ஆண்மைகளை மற்றவன் ஒப்புக் கொள்ளுவதில்லை. ஓயாத சண்டை! ஓயாத வழக்கு! ஓயாத தர்க்கம்! எல்லாவற்றையும் நீக்கிப் போட்டு அனைவரும் ஒருவழிப்படலாகாதா என்றால் தங்கள் தங்கள் மதங்களின் பெருமை சொல்லி அளக்க வருகிறார்கள். அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டுமே என்றால், ‘கூடாது. அவை கடவுள் அவதார புருஷராகவும் தூதராகவும் பூலோகத்தில் வந்து சொன்னதல்லவா’ என்கிறார்கள். சமூகம் ஒற்றுமைப்படாதபடியும் சண்டையிட்டுத் தொல்லை அனுபவிக்கும்படியுமா கடவுள் சொல்லியிருப்பார் என்பது சுயமரியாதைக்காரர் கேள்வி. சொல்லித்தான் இருப்பார் என்றால் அவர் கடவுளா? அப்படிப்பட்ட கடவுளைச் சுயமரியாதைக்காரர் வெறுக்கிறார்கள். இல்லை, இல்லை. அந்தக் காலத்தில் மக்களின் அறிவுக்குத் தக்கபடி கடவுள் மதம் போதித்தார். இக்காலத்திலும் அவற்றிற்காக அவர் சண்டை இட்டுக் கொள்ளச் சொல்லவில்லை யென்றால் அந்த நல்ல கடவுளுக்குச் சுயமரியாதைக்காரர் நமஸ்காரம் சொல்லுகிறார்கள் வீட்டிலிருந்தபடியே. ஆரூரில் பிறந்தால் முத்தி, அம்பலத்தில் காண முத்தி, காசியில் இறக்க முத்தி, திருவண்ணாமலையை நினைக்க முத்தி - இவ்விதம் தருவதாக அவ்வவ் விடங்களில் |