பக்கம் எண் :

280

68
அரிசி சோம்பலை உண்டாக்குமா?


இப்படிச் சொன்னவர் நேரு.

பத்தாயிரம் ஆண்டுகளாகத் தமிழர் அரிசிச்சோறு உண்டு வருகின்றார்கள். அவர்களிடம் சுறுசுறுப்புக்குக் குறைவிருந்ததாக ஒரு தகவலும் இல்லை. எந்த ஆராய்ச்சிக்காரனும் அரிசியை எதிர்த்ததில்லை.

அன்றும் இன்றும் அறிவிற் குறைந்து விடவில்லை தமிழர்; வீரத்தில் குறைந்ததாக வரலாறு இல்லை. அரிசிச் சோறு சோம்பலை வளர்க்கும் என்று நேருதான் இன்று கூறுகின்றார்.

சிலகால், இன்று அரிசியின் தரம் குறைந்து போனதோ என்னமோ! அப்படியானால் கோதுமையின் தரமும் குறைந்து போகாமல் இராது.

இன்றைய நிலையில் அரிசிச் சோறும் கோதுமைச் சோறும் தம் தரத்தில் மாற்றமடைந்துதான் இருக்கின்றன என்றால் அதுபற்றி நாம் எண்ணித்தான் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும்.

கோதுமை, அரிசிச்சோறு உண்பவர்கள் ஏமாற்றும் ஆற்றல் வாய்ந்தவர்கள்; மேலும் அவர்கள் அறநெறியினின்று வழுவுகின்றவர்களாகவும் இருக்கின்றார்கள்.

அரிசிச் சோறு உண்பவர்கள் ஏமாந்த சோணகிரிகள்; அறநெறியினின்று உயிர் போனாலும் தவறாத நேர்மை யுடையவர்களாக இருக்கின்றார்கள்.